Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் பிறந்த நாளன்று, பொலனறுவையில் சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளில் அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.

இந்த தினத்தில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது செப்டம்பர் மாதம் 2ம் திகதி பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடத்தப்படக்கூடிய சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அநேகமாக எதிர்வரும் 4ம் திகதியே பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை உறுதி செய்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளா சந்திப்பில், செப்டம்பர் மாதம் 2ம் திகதி தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

எதிhவரும் 2ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் பொலனறுவையில் நடைபெறவுள்ளது.

எனவே அமைச்சர்கள் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமாயின் பாராளுமன்றின் அங்கீகாரம் அவசிமாகின்றது.

செப்டம்பர் மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள அமர்வுகளில் அரசாங்கம் இந்த யோசனையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

எனினும், இது குறித்து விவாதம் நடாத்த ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதாக ஜே.வி.பி கட்சி, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே, செப்டம்பர் மாதம் 2ம் திகதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments

Powered by Blogger.