Header Ads



"பைசால் காசீம்" கவனிக்கப்படுவாரா..?

-உடையான்-

இன்று  முஸ்லீம் காங்கிரசிற்கு கிடைக்கவிருக்கும்  பிரதியமைச்சுப் பதவிகள்  தொடர்பாக  எத்தனையோ வதந்திகள்  இணையத்தளங்கள் ஊடாகவும்  வாட்ஸ் அப் ,முகநூல்  போன்றவற்றிநூடாகவும்  பரப்பப்படுகின்றன.  அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக  பதினோர்  வருடங்கள்  பாராளுமன்றத்தில்  இருந்துவருபவரும், ரிசாட்  கட்சியை  விட்டு பிரியும்போதும், நிஜாமுத்தீன்  கட்சியில்  இருந்து  பிரிந்து  செல்லும்போதும்  அவர்களோடு  வரும்படி  எவ்வளவோ அழைப்புக்களும் வற்புறுத்தல்களும் இருந்தாலும் அவற்றை  கவனத்தில் கொள்ளாதவர் பைசால்காசீம்.  பிரதியமைச்சுக்கள்  பற்றிய பலவாறான  செய்திகள்  அடிபட்டாலும்  அவர் இதுபற்றி அவ்வளவு  அலட்டிக்கொள்பவராக  தெரியவில்லை.

முஸ்லீம் காங்கிரசில்  இருந்து பிரிந்துவந்தால் பதவி,வாகனம் ,பெருந்தொகையான காசு போன்ற எத்தனையோ ஆசைகளும்,பகட்டுகளும்  மகிந்த தரப்பினரால் காட்டப்பட்டும் கட்சியையும் கட்சித் தலைமையையும் ஒருபோதும் வஞ்சிக்காமல்  ஒரே  பிடியில் கட்சித்தலைமையோடு தோள்சேர்த்து  தைரியமாக  நின்ற  பைசால் காசீம்  எந்தவகையிலும்  இந்த பிரதியமைச்சுப்பதவிகள்  வழங்கப்படும்போது   தட்டிக்கழிக்கப்படமுடியாத ஒருவராகிவிட்டார் என்று  மக்கள் பேசுவதை  பரவலாக கேட்கமுடிகின்றது.

இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற  பொதுத்தேர்தலில்  அம்பாரை முஸ்லீம்கள்  சார்பாக  போட்டியிட்டு  அதிகூடிய  வாக்குகளாக  61401  வாக்குகளைப்பெற்ற   முஸ்லீம்  வேட்பாளர். இவர் மக்களால்  அதிகம்  முழு மாவட்டத்திலும்  நேசிக்கப்படுபவராக திகழ்கின்றார்.  மக்களது  பிரச்சனைகளை   எந்த  நேரத்திலும் செவிமடுக்கக்கூடிய  இவர் அப்பிரச்சினைகளில்  ஒரு கரைகாணும்வரை  ஓயவே மாட்டார். ஏனையவர்களைப்போன்று இவரது செல்லிடப்பேசி  என்றும் நிறுத்தப்படுவதில்லை, எந்நேரம் அழைத்தாலும் பதில் கிடைக்கும், இவருக்கு ஒரு வோட்டு கட்டாயம் போடணும் என்று   மக்கள்  தேர்தல் காலத்தில் பேசியது   பலசந்தர்ப்பங்களில் செவிமடுக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி  கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளராக  இருந்த இவர் கடந்த காலங்களில் நாடாளாவிய ரீதியில் நடைபெற்ற  மாகாண,உள்ளூராட்சி  தேர்தலில் தெற்கு,மத்திய,வடக்கு,வடமேல் ,ஊவா ,மேல் மாகாணங்களில்  ஒவ்வொரு  முஸ்லீம் பிரதேசங்களிலும்  ஊரூராகச்சென்று  ராப்பகலாக கட்சிக்காக உழைத்தவர் என்பதை யாராலும்  மறுக்க முடியாது.இவ்வாறானவர் இருக்கும்போது  சிலர்  இவரை நினைத்தும்கூட பார்க்காமல்  தான்தோன்றித்தனமாக எழுதிக்கொண்டிருப்பது  வேடிக்கையாகவே  இருக்கின்றது.

இதற்கிடையில்  கட்சியின் தலைமை  இந்தக்கட்டுரை எழுதப்படும்வரை  பிரதியமைச்சுக்களிற்காக  எவரது  பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

சில  பாராளுமன்ற  உறுப்பினர்களது அறிக்கைகளும்  வதந்தியாக பரப்பப்படும் செய்திகளும் கிராமங்களில் பேசிக்கொள்வதுபோல “ஆனை  அடிப்பதற்கு  முன்னர்  தானடித்துக்கொள்ளுகின்றார்கள்” போலுள்ளது.  

இன்னுமோரிரு நாட்களில் யார் அந்த பிரதியமைச்சர்கள் என்று  தெரிந்துவிடும்,  பொறுத்திருந்துதான்  பார்ப்போமே!

1 comment:

  1. அமைச்சுப்பதவி / செஞ்சோற்றுக்கடன்

    UNP அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் முழுமையான அமைச்சுப் பொருப்பொன்று அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட வேண்டும், ஏனென்றல் தலைவர் அஷ்ரப் இற்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அம்பாறை மாவட்டம் என்று சொல்லப்படும் பிரதேசம் முஸ்லிம் காங்கிரசுக்கு ஊடக முழுமையான அமைச்சுப்பாதவி ஒன்றை சுவைத்ததே இல்லை.

    தலைவர் ரவூப் சுய நலம், சுய கவுரவம் பாராது கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஒன்றை தக்க வைத்து பாராளுமன்றத்தில் நான்கு பிரதிநிதிகளை வித்திட்ட அம்பாறை மாவட்டத்திற்கே கொடுக்க வேண்டும்.

    அவ்வாறு அவர் செய்வாராயின் சரித்திரம் அவரின் பெயர் சொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.