Header Ads



மிகச் சிறிய வயதில், மிகப் பெரிய மீனை பிடித்த சிறுவன்

கனடாவின் பிரின்ஸ் தீவில் அமைந்துள்ள துறைமுகப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவனின் தூண்டிலில் ஒருவன் 220 கிலோ கிராம் நிறையுடைய சூறை மீன் சிக்கியுள்ளது. மிகச் சிறிய வயதில் மிகப் பெரிய மீனை பிடித்த சிறுவன் என்ற சாதனை அச்சிறுவனுக்கு சொந்தமாகியுள்ளது.

கொயேன் நோர்டன் என்ற 10 வயது சிறுவனின் தூண்டிலியேயே இந்த மீன் சிக்கியுள்ளது.

சர்வதேச கேம் பிஷ் அஸோஸியேசன் கருத்து தெரிவிக்கையில் 10 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய சிறுவனின் தூண்டிலில் சிக்கிய மீன்களில் இதுவே மிகப் பெரியது என்று கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை குடும்பத்துடன் படகில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவனின் தூண்டிலில் இந்த மீன் சிக்கியுள்ளது. ஐந்து வயது முதல் நோர்டன் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறான் என அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். 'எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பத்திலும் நாம் மீன் பிடிக்க செல்வோம்' என்று கூறியுள்ள சிறுவனின் தந்தை கிரேக் நோர்டன் மீன்பிடிப் படகு விற்பனையாளராவார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த மீனை மீட்டெடுக்க கொயேன்  ​நோர்டன் போராடினான் என்றும் கூறியுள்ளார்.


3 comments:

Powered by Blogger.