Header Ads



இலங்கையில் தயாரிக்கப்படும், ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்தானதா...?

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயூர்வேத மூலிகை மூலம் சிகிச்சை மேற்கொண்ட ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இறக்கும் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜேர்மனியை சேர்ந்த மருத்துவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை நாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இலங்கையில் உள்ள ஒரு ஆயுர்வேத மையத்தில் ஒரு வாரமாக தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு ஆயுர்வேத மையம் பரிந்துரை செய்திருந்த மூலிகைகளுடன் ஜேர்மன் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

தாய்நாட்டிற்கு வந்த பிறகு ஆயுர்வேத மூலிகைகளை தொடர்ந்து சில வாரங்கள் அருந்தியுள்ளார்.

ஆனால், கடந்த யூலை மாதம் அந்த பென்ணிற்கு திடீரென நரம்பியல் சேதாரம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

ஹேம்பெர்க்கில் உள்ள Asklepios Clinic Barmbek மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை பரிசோதனை செய்த டோபியஸ் மெய்யர் என்ற நரம்பியல் மருத்துவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பெண் எடுத்துக்கொண்ட ஆயுர்வேத மருந்தில் கலக்க வேண்டிய பாதரசத்தின் சராசரி அளவை விட 5,66,110 மடங்கு அதிகமாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

மேலும், அந்த பெண் தொடர்ந்து சில வாரங்களாக சுமார் 213 கிராம் அளவுள்ள பாதரசத்தை எடுத்துள்ளதும் மருத்துவருக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் ஜேர்மனி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டவர் இறக்கும் தருவாயில் இருந்து அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆயுர்வேத மூலிகைகளில் இந்த அளவிற்கு பாதரசத்தை கலந்தால் அது ஒருவரின் உயிரை எளிதில் பறித்துவிடும்.

ஆனால், தக்க தருணத்தில் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது அந்த பெண் 68 கிலோ எடையிலிருந்து 52 கிலோவாக குறைந்துள்ளது. அவரால் இனி பணிக்கு திரும்ப முடியாது என்றும் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மூலிகை குறித்து தகவல் சேகரித்தபோது, குறிப்பிட்ட அந்த ஆயுர்வேத மூலிகைகளை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மருந்துக்களில் உள்ள தீங்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Q

No comments

Powered by Blogger.