Header Ads



மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி, பணம் பெற்ற 2 நிருபர்கள் கைது

மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி சுமார் 3 மில்லியன் யூரோ பணத்தை பெற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு நிருபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எரிக் லாரெண்ட் மற்றும் கேத்தரின் கிரேசியட் என்ற இரண்டு நிருபர்கள் மோரோக்கோ நாட்டு மன்னரான 6-வது முகமதுவை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகின்றனர்.

இந்த புத்தகத்தில் மன்னரின் பெருமையை சேதப்படுத்தும் விதத்தில் அவரை பற்றிய ரகசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய மொரோக்கோ அரசு வழக்கறிஞர் Eric Dupond-Moretti, புத்தகத்தை வெளியிடுவது தொடர்பாக கடந்த யூலை மாதம் இரண்டு நிருபர்களும் மோரோக்கோ நாட்டு அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

பின்னர், சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட கூடாது என்றால் தங்களுக்கு 3 மில்லியன் யூரோ பணம் அளிக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். நிருபர்கள் கேட்டவாறு அவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நிருபர்களின் வழக்கறிஞர் கூறுகையில், மொரோக்கோ அதிகாரிகளுடன் பணவர்த்தனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்றும் ஆனால், அதிகாரிகள் நிருபர்களை திட்டமிட்டு சதிவலையில் சிக்க வைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

புத்தகத்தை வெளியிடும் Editions du Seuil என்ற நிறுவனமும் நிருபர்கள் பணம் பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது.

மொரோக்கோ மன்னரை மிரட்டி பணம் பெற்றுள்ள குற்றத்திற்காக இரண்டு நிருபர்களையும் பிரான்ஸ் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரண்டு நிருபர்களுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அல்லாஹ் சொன்னபடி ஆட்சி செய்தால் எவனாலும் பயம்காட்ட முடியாது.ஆட்சியில் இருந்துகொண்டு செய்ய வேண்டிய ஹராம் எல்லாம் செய்வது.இத எப்படியாவது மீடியாக்கள் கண்டு பிடித்து அம்பலப்படுத்துவது.அப்போ ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மானமும் காற்றில் பறப்பது.இப்போதைய நிலையில் நம் நற்கருமங்களை யாரும் கண்டுகொள்வதில்லை எங்கே ஒரு தப்பு நடக்கிறது என்றுதான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து நடந்தால் ஏன் வேறு யாருக்கும் பயப்பட வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.