Header Ads



வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த, ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும் - ஸுஹைர்

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சொந்த வாழிடங்களில் குடியமர்த்த முன்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு, குறித்து பேசுவது அர்த்தபூர்வமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனிமாகாணம் போன்ற கதைகள் ஜனவரி 8ம் திகதியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதம் மீள தலைதூக்கு வதற்கும் துணைபுரிவதாகவே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸனலி விடுத்துள்ள அறிக்கை குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இனவாதமும், மதவாதமும் நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன் சூடு தணிவதற்குள்ளேயே வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனி மாகாணம் குறித்து பேசப்படுகின்றது. இது தூரநோக்கற்ற செயலாகும்.

இச்செயலானது இந்நாட்டில் இனவாதமும், மதவாதமும் மீண்டும் தலை தூக்குவதற்கு உதவும் வகையிலேயே அமையும். இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும், பொதுபல சேனா போன்ற மதவாத அமைப்புகளுமே பெரிதும் நன்மை பெறும்.

இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நாட்டின் நகர்வுகள் குறித்த போதிய தெளிவைப் பெற்றிராதவர்கள் தான் இப்படியான கோரிக்கைகளை முன் வைப்பர்.

அதேநேரம் நாடு குறித்தும் சமூகம் குறித்தும் தூர நோக்கோடு பார்ப்பவர்கள் இவ்வாறான கதைகளை முன்வைக்க மாட்டார்கள். அதற்கான சூழலும் நேரமும் இதுவல்ல.

வடக்கில் காலா காலமாக வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்களை புலிகள் இயக் கத்தினரே பலாத்காரமாக வெளியேற்றினர். அந்த முஸ்லிம்கள் இரண்டு தசாப்தங்கள் கடந்தும் தமது சொந்த வாழிடங்களில் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலைமையே தொடர்கின்றது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுவது அம்மக்களை நடுத்தெருவில் விடுவதற்கு சமமான செயலாகும்.

அதனால் இம் மக்களைச் சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்த்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அதுவே இன்றைய உடனடி அவசரத் தேவை எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.

2 comments:

  1. வடக்கில் முஸ்லிம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள்குடியேற்றம் செய்யும் வரை அவர்களை முஸ்லிம்கள் நம்பி விடக்கூடாது .ஏனெனில் ஒவ்வொரு தேர்தல் முடிந்த கையுடன் ஜனாதிபதி மூலம் தமிழர்களின் மீள்குடியேற்ற விடயங்களை மாத்திரமே செய்து வருகின்றார்கள் .

    ReplyDelete
  2. Good opinion.and good lesson for our muslims politicians

    ReplyDelete

Powered by Blogger.