Header Ads



மனம் மாறினார் மைத்திரி

எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இன்று (31) காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக் கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி தமது கோரிக்கைக்கு அனுமதி அளித்ததாக அவர் கூறியுள்ளார். 

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார். 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஏற்படும் இழப்பு தொடர்பிலும் இங்கு ஜனாதிபதிக்கு விசேடமாக எடுத்துக்கூறியதாக விமல் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் அதிகாரத்தை சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னர் வழங்கியிருந்தனர். இதுகுறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.