Header Ads



மாதம்பையில் நடந்தது என்ன..?

-நாகூர் ழரீஃப்-

31/07/2015 மாதம்பையில் சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ஜும்ஆவை ஜமாஅத்தே இஸ்லாமியனர் தடுத்ததாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் ஒரு செய்தி பரவுகின்றது. எனவே, அதன் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஒரு பக்கத் தகவல் மாத்திரம் இன்னும் தெளிவின்மையையும் குரோதத்தையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

பொதுவான ஜும்ஆ நடைபெறும் பள்ளிவாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள ஒரு கடையை தமது மர்கஸாகவும் அதில் ஜும்ஆவை தொடங்குவதற்கும் இவர்கள் எத்தணிக்கின்ற வேளையில் ஊர் மக்கள் ஒன்று கூடி இதனை அனுமதிக்கமுடியாது என்கின்றனர். எவரும் மரண அச்சுறுத்தல் செய்யவோ, பள்ளிவாசலை தகர்க்கவோ, அல் குர்ஆன் பிரதிகளை எரிக்கவோ முற்படவில்லை.

வெளி இடங்களில் இருந்து வந்திருந்த அவர்களது ஆதரவாளர்கள், பிரச்சினையைக் கருத்திற் கொண்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊர் நிலமை மோசமடைந்ததால் பொலிஸார் முன்னின்று மற்றுமுண்டான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இவ்வறிக்கையில் குறிப்பிடப்படது போன்று காடையர்களோ அராஜகம் செய்வோர்களோ இங்கு வரவில்லைளூ மாறாக சமூக ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் குறியாகக் கொண்டவர்களே வந்திருந்தவர்களாவர். 

50 வருடங்களாக அல்குர்ஆனை விளங்கவேண்டும் எனும் இலக்குடன் இயங்கும் ஒரு தஃவா அமைப்பு அதனை எரித்து நாசமாக்குமா? இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இதனை முன்னின்று செய்திருந்தால் இவர்களை விட பன்மடங்கு ஊடகத் துறையில் அனுபவம் பெற்றவர்கள் என்ற வகையில் ஒரு ஊடக அறிக்கையை விட்டிருப்பார்கள் அல்லவா? ஆவர்கள் மௌனமாக இருப்தில் இருந்து இதற்கும் அவ்வமைப்பினருக்கும் சம்பந்தமில்லாத ஒரு அசம்பாவிதமாகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் எந்த ஒரு இபாதாவையும் வெரும் சடங்காக எங்கள் மீது விதிக்கவில்லை. ஓவ்வொரு கடமைகளுக்குப் பின் அதன் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த அடிப்படையில் ஜூமுஆ என்ற கடமையும் ஒரு விசாலமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

அதுதான் சமூக ஒற்றுமைளூ வாராந்தம் ஊர் மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி தமது இறையுணர்வை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்ளூ ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும்ளூ தமக்கிடையே பிரிவனை ஏற்படக் கூடாது என்பன போன்ற தூரநோக்கையே இக்கடமை எமக்கு உணர்தி நிற்கின்றது.

இதனால்த்தான் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் போன்றவர்களின் பின்னால் நின்று இக்கடமையை உயர்வான ஸஹாபாக்களும், ஜஹமிய்யாக்களுடன் சேர்ந்து இந்த உம்மத்தின் அக்கீதாக் கொள்கையினைத் தொகுத்து அதற்காக மிகப் பெரிய துன்பங்களை சந்தித்த இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (றஹ்) போன்றவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

எனவே, இத்தருனத்தில் எதிரிகளுக்கு சந்தர்ப்பம் அளித்த குற்றவாளிகளாக நிற்காது சமூகத்தை ஒன்றுபடுத்திய பெருமைக்குரியவர்களாக திகழவேண்டும். நாட்டு நிலமைகளைக் கவணத்திற் கொண்டு புத்திசாதுர்யமாக செயலாற்ற அனைவரும் முன்வரவேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.

15 comments:

  1. 100 மீற்றுக்குள் இன்னொரு ஜும்மா பால்லிவாசல் அமைவதை தவிர்ப்பதே சிறந்ததாகும். தகவலுக்கு நாகூர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Thow people are similar to BBS and you people are not second to Raawana Balaya. Your Senaawa should should limit the activities within Pakistan and have nothing to do in Sri Lanka.

    ReplyDelete
  3. jaffnamuslim eku Jezakkallah hir

    ReplyDelete
  4. Senra year madrasa adithu norkkapattathum poiya oru juma than nadaknum bida juma vil mumeen thola matan islam velangi nadakavom veru mada thalam amithal intha chandi engay kuraan kevala paduthum pothu waaya pothi irunga mahdoodi quraan vemarsanam seydavar aadaram undu

    ReplyDelete
  5. neenka sonna ellam sarithan,poonka sir ottrumai otrumai entru wakkalaththu wankama

    ReplyDelete
  6. புனித இஸ்லாத்தினை அரசியல் சாக்கடையாக எத்தனிக்கும் ஏதோ நாம்தாம் நாட்டின் கிலாபத் ஆட்சியை பிடித்து விடுவோமென மார்தட்டிக்கொண்டிருக்கு ஐமாஅதே இஸ்லாமி இயக்க வெறியர்களே
    நீங்கள் இஸ்லாத்தின் புனிதத்தினை அசிங்கப்படுத்தாமல் மஞ்ல் நிற ஆடைகளைக் கட்டிக்கொண்டு பண்சலைகளுக்கு சென்று அமர்ந்தாலே போதும்
    இஸ்லாம் தானாய் வளரும்

    ReplyDelete
    Replies
    1. You are foolish guy. Is you know all the story? Do you known regarding Madampe. Before the you write the comment just visit asking the people. True story.
      Allah will help you.

      Delete
  7. Kuran patriya unmai ennavenraal , Kuranai munvaiththu palavizamaana amaippugal
    marupatta kolgaigaludan seyatpadalam . Kuran mattumalla , ella samayangalukkum
    izu porunthum . Jananayagamthaan antha urimaiyai valangukinrathu . Makkal izai
    purinthu vaiththiruppazu migavum mukkiyam . Enenraal avargalaik kuri
    vaiththuthaan ellame nadakkinrana . Visheshamaga anniya inaththu makkal vaalum
    naadugalil jananayagaththin palam azigamaga irukkum . Naatu shatta thittangal azan
    adippadaiyil irukkum .

    ReplyDelete
  8. இதில் எந்த தரப்பினரும் அல்லாஹ்வுக்காக தீன் பணி செய்வதாகத் தெரியவில்லை,எல்லாம் டினாருக்கும் றியாலுக்கும்தான். அல்லாஹ்வுக்காக வேலை செய்பவர்கள் ஊரையே இரண்டுபட வைக்கமாட்டார்கள் நம் நாடு இருக்கும் நிலை என்ன நாம் எப்படியான இக்கட்டில் இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கிறார்களா? அவரவர் ஜமாஅத் மட்டும்தான் சொர்க்கம் செல்லும் என்ற நினைப்பு வேறு?ஒரு முஸ்லீமுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பாகிய நற்குணம்,விட்டுக்கொடுத்தல்,சகோதரனை மதித்து நடத்தல்,தக்வா,இஹ்லாஸ் எதுவும் இவர்களிடம் கணக்கூடியதாக இல்லை.அடுத்த ஜமாஅத் சகோதரனை ஒரு காபீரைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள்.இரண்டு மாசத்திற்கு வெளிநாட்டு பணம் வராவிட்டால் இவரகள் பள்ளிவாசலுக்கு வருவதே சந்தேகம்.நம் முன்னோர் காலத்தில் முஸ்லீங்களுக்கு இருந்த செல்வாக்கு மதிப்பு மரியாதை எல்லாம் இத்தறுதலைகளால் நாசமாகி விட்டது.இவர்கள் இஸ்லத்தை வளர்க்க வந்தர்களா அழிக்க வந்தார்களா? ஒவ்வொறு ஊரிலும் இப்படியே பிரச்சனைப்பட்டு போலீஸ்,கோட் என்று அலைந்தால் மாற்று சமூகம் எப்படி இஸ்லாத்திற்குள் வரும்,வர இருப்பவர்களையும் தடுக்கிறார்களே! நம்மை விட கேவலமானவர்கள் முஸ்லீங்கள் என்று அவர்கள் எண்ணும் அளவிக்கு நமது சகோதரர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது கவலையழிக்கிறது

    ReplyDelete
  9. வெட்கம் கேட்ட புத்தியற்ற இயக்க வெறி சைத்தான்கள்.......

    சிலோன் முஸ்லிம் அனைவரும் ஓன்று சேர்ந்து இயக்கங்கள் அனைத்தையும் இலங்கையில் தடை செய்யணும்....இத முன்பும் நான் எழுதி உள்ளன்.

    .....இந்த் இயக்க மலவிகள் என்ன தொழில் செய்ரானுகள் சாப்பிட எண்டு ஆராய்ந்து பாருங்கள்........ கூலிக்கு இஸ்லாத்தை விற்று தின்கானுகள்...........சமூக நாசமே

    ReplyDelete
  10. Short: Like other murthad group (SLTJ) deny authentic Hadith.(2)Criticize companion of prophet Muhammad (sal).(3)Criticize Imam's Buharee,Muslim Etr(4)what PJ say, It is like a revelation.(5)Those who are against to his opinion Mushreek Kafeer (Nawdubilla).(6)Now I want know who are these (SLTJ)?

    ReplyDelete
  11. Indru Islaththai than pesuhirom endru koorikkolhindra iyakkangalana..(Shirk +Bidath or Hilafath+Otrumai) patriya welakkangalum pottipotukondu mick pottu kathurarhal... aanaa oorukku ubadesam thamakkalla endra nilaipai than iwarhalidam kawanikka mudihindra kashappana unmai.. ean endral Otrumai patri pesuhindra oru iyakkathin prazana ooril than inda prachinai bidath wazihalin padi ungaludan udan pada mudiyallaya awarhalai awarhalin waliyil wida wendiyazu thane ean endral awarhaluku oru oorla rendu palli kattuwazu waadikkayana widayam... Otrumai Otrumai endru kookkural iduhindrawarhal indru awarhaluku endru warum pozu Otrumaiyai marandu Police idam theerpu ketkindara Oru parizafamana nilai em samuzayaththil .. ingu nangu padiththawarhal irukkindra iyakkathinal izatkku theerwu kaana mudiyalla endral matra iyakkangalai ennawendru solla..
    Izil irundu oru vidayam vilanguhirazu Ella Iyakkangalum Islaththai pesi Iyakkaththa Walarkirarhal... Oru Iyakkamenum Islathitkaha Iyakkaththai widawillai izuthan unmai...
    Pozu makkalahiya emazu muzat kadamai Iyakkam pesuhindra iyakka Weriyarhalaiyum Iyakkangalayum Thawirththu .. Quran + Sunna adippadaila Iyakkangaluku appart patta thani maniza Dawwa than siranda therwu ena naan ninakindren..
    Ellam arindawan Allah.. Awane pozumanawan....

    ReplyDelete
  12. Bidath or Hilfath Otrumai patri maydai potu wilakkam kodukindrawarhalidame Islam illai iwarhalidam Iyakkam weri than irukkirazu ean endral Otrumaiyai patri pesuhindra padiththa mezahalin mukkiya pradesam ingu iwarhaluku otrumaiyai nilanaatta mudiyamal Police warawalaikappattazu oru kawalai tharakoodiya wedikkaiyana widayam ...
    matra iyakkam thaniyana weru Palli katti Juma nadathuwazu awarhalin kai wanda kalai enpazu ungaluku therindum awarhalai awarhalin waliyil wittu karuththai karuthal ezir kollamal Polce idam theerwu kanawendiya thurpakkiya nilai...
    Indraiya kattayamum awasiyamumana thewai Iyakka weriyalla Islam.. enawe Thani maniza Daawwa than sariyana murai ena naan ninakindren..
    Ellam Arindawan Allah mattume...

    ReplyDelete
  13. Bro this madampe peoples comments only by articel jzallahu for madampe people

    ReplyDelete

Powered by Blogger.