Header Ads



ஹக்கீம் கலந்துகொண்ட கூட்டத்தில் கல்வீச முயற்சி - ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர் (படங்கள்)

(UL)

முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது – கல்வீச முற்பட்டவர்களை, அங்கு நின்ற மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதான வீதியருகில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வாசித் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது, மேற்படி கூட்டத்தைக் குழப்பும் நோக்குடன் அங்கு வந்த கும்பலொன்று,  சலசலப்பை ஏற்படுத்த முயன்றபோதிலும், மு.கா. கட்சி ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சென்று, குறித்த கும்பலை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதன் பின்னர், கூட்ட மேடை மீது – கல் வீசுவற்கு, அதே கும்பல் முயற்சித்தபோது, அவர்களை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டிப் பிடித்தாகவும், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் கடும் போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழப்பத்தினை ஏற்படுத்த முயன்ற நபரொருவரை, பொலிஸார் பிடித்து இழுத்துச் சென்றதையும் காண முடிந்தது.

எவ்வாறாயினும், மேற்படி கூட்டத்தில் வேட்பாளர்கள், மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகள் பலர் உரையாற்றிய நிலையில், மு.காங்கிரஸ் தலைவரும் – நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார்.

இக் கூட்டத்தைக் காண்பதற்கு பெருமளவான ஆதரவாளர்கள் அங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


7 comments:

  1. சின்ன கையால் கொடுத்து பெரியகையால் வாங்கிக் கொள்ளும் நிலைமையை இந்த சுயநல அரசியல் வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பணிவாய் கேட்டுக் கொள்கிறோம்.

    முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனி நபரின் கட்சியல்ல இது முஸ்லிம் மக்களை ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமைபடுத்தி முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்ரெடுப்பதட்கான கட்சி. தனி நபரின் சுயநலத்துக்காகவோ, பிரதேச வாதத்துக்காகவோ பொத்திவில் மக்கள் இடம் கொடாமல் கட்சியை காப்பாற்றி முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலை நாட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  2. Pls don't update fake news.

    ReplyDelete
  3. இந்த செய்தியாசிரியர் தயவு செய்து கண்மூடித்தனமாக எழுதியதை வாபஸ் பெறவேண்டும்.முகா தலைமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட அனைவரும்முகா போராளிகளே

    ReplyDelete
  4. கொலை செய்வதை விட குழப்பம் செய்வது மகா பெரும் பாவம் என்று குரான் கூறுகிறது இதனை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.நாசமாப்போன இந்த உலக ஆசைக்கு இவ்வலவு பாடு படுகிறார்கள்.மறுமையை அஞ்சிக்கொல்லுங்கள். ,

    ReplyDelete
  5. rishard should not have come inside this area ans should have stayed in Vanni and Mannar. He wants to become another maharaja like Athaullla.

    ReplyDelete
  6. give them to Reply in your Real X and send them home Don t get back Attqullqah and Hibullah with mahinda s tiles

    ReplyDelete

Powered by Blogger.