Header Ads



"வெற்றிலைக்கு புள்ளடியிடாதீர்கள், ரணிலுக்கு கொடுக்காதீர்கள்"

மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஷவும் அவரது கூட்டமும் நாட்டில் இனவாதத்தை ஊக்குவித்து தேர்தலில் வெற்றிப்பெற முயற்சிக்கின்றது. எனவே பொதுமக்கள் இந்த இனவாதப் பொறியில் சிக்கிவிடக்ககூடாது எனத் தெரிவத்துள்ள ஜே.வி.பி தலைவர் அநுரதிஸாநாயக்க.

வெற்றிலைக்கு புள்ளடியிடுவதன் மூலம் மோசடிக்காரர்களுக்கும் திருடர்களுக்கும் எதிராக விசாரனைகளை நடத்த வேண்டாம் தண்டனை விதிக்க வேண்டாம் என்பதே அர்த்தமாகும் என்று தெரிவித்தார்.

மொறட்டுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜே.வி.பி தலைவர் அநுரதிஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு இவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மஹிந்த ராஜபக்  ஷவிடம் மக்களுக்கு தெரிவிப்பதற்கு எதுவும் கிடையாது.

எனவே மஹிந்தவும் அவரது கூட்டமும் நாட்டுக்குள் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றது.

இந்தப் பொறியில் மக்கள் சிக்கிவிடக்கூடாது.

இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்பு இளம் வயதில் ராஜபக்  ஷ 1970இல் அரசியலுக்கு வந்து அமைச்சரானார். பின்னர் பிரதமரானார், எதிர் கட்சித் தலைவனார், ஜனாதிபதியானார்.

இன்று மீண்டும் எம்.பி யாக முயற்சிக்கின்றார். 25 வயதில் இளைஞனாக எம்.பியாக அமைச்சரானார். இன்று “தாத்தா” வயதில் மீண்டும் எம்.பியாக முயற்சிக்கின்றார்.

எமது நாட்டில் வளங்களை, நிதியை கொள்ளையடித்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் இறுதியில் மஹிந்தவே சிக்குவார். எனவேதான் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றார். 

மஹிந்தவின் தில்லு முல்லுகளை வெளியிட்டதால் எனக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போகிறார்.

நானும் தயாராக இருக்கின்றேன். இவர் செய்த மோசடிகள் தொடர்பாக சாட்சியங்களுடன்  லஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யதுள்ளோம். 

அதனை நீதிமன்றத்திற்கு வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பது நல்லதாகும்.

நீங்கள் வெற்றிலைக்கு புள்ளடியிடுவதன் மூலம் ஊழல் மோசடிக்காரர்கள் திருடர்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம். தண்டனை வழங்க வேண்டாம் என்றே அர்த்தப்படும்.

வெற்றிலைக்கு இல்லாவிட்டால் எதற்கு கொடுப்பது ரணிலுக்கே. அதனையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் ரணில் தான் தனது ஆட்சிகாலத்தில் அரச சொத்துக்களை தனியார் மயமாக்கினார்.

எனவே இம் முறை உங்கள் வாக்குகளை ஜே.வி.பிக்கு வழங்குங்கள் என்றும் அநூர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.