Header Ads



சந்திரிக்கா செய்த தவறை, மைத்திரி விடக்கூடாது - ரணில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, 2003 ஆம் ஆண்டின் போது அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்டு நாட்டை பற்றி சிந்திக்காது கட்சியை மாத்திரம் நினைத்து செயற்பட்டது போன்று, ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக புரட்சியை மீள பின்னோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முனைகின்றாரா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.

எனினும் தேர்தலின் பின்பான அடுத்த ஐந்தாண்டில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் தலைமையின் கீழேயே நாம் எமது ஆட்சி அமைப்போம். இதனூடாக முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றி பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்கவை அறுபது வருடங்களாக நான் நன்கு அறிவேன். அவரது சகோதரன் அநுர பண்டாநாயக்க எனது பாடசாலை உற்ற நண்பனாகும். இந்நிலையில் சிறு வயதில் நானும், முன்னாள் அமைச்சர் தினே~; குணவர்தனவும் அவரது வீட்டிற்கு விளையாட செல்வோம். இதன்போதே சந்திரிகாவுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.

அவருடன் நடனப்போட்டியிலும் நான் பங்கு கொண்டுள்ளேன். நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் இருவரும் ஒருமித்து செயற்பட்டுள்ளோம். இருந்த போதிலும் அரசியல் விடயதானங்களில் எம் இருவரிற்கும் பாரிய கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. 

நாம் இருவரும் இரண்டு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவர்களாக காணப்பட்டோம். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பாரிய அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் உக்கிரமான போர் இடம்பெற்று வந்தது. இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொண்டு செயற்பட்டது. இந்த போரில் நாம் இருவரும் மாத்தரிம் விதிவிலக்கல்ல. 

இருந்தபோதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வருவதற்கு பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும். 1987 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் வேட்பாளருக்கு உதவிப்புரிந்து கட்சியை ஒரளவு வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தது சந்திரிக்காவும் விஜய குமாரதுங்கவுமாகும்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இனிமேல் அரசாங்கமே; அமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்தவேளை ,1994 ஆம் ஆண்டு சந்திக்கா பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்து சேர்த்தார். 

மேலும் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்து மாத்திரம் அவரது பணிகள் நிறைவுப்பெற வில்லை. மாறாக ; நாட்டிற்கு பெரும் சவாலாக இருந்த விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்ததிற்கும் முகங்கொடுத்தார். இந்த போரின் போது சமாதானத்தை ஏற்படுத்துவற்கும் முயற்சித்தார்.

எனினும் தனது ஆட்சிக்காலத்தின் போது பயங்கரவாத்தின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தை வெற்றிக் கொண்டு பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பிரதான வகிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்கவே செயற்பட்டார். இந்த போராட்டத்தின் போது தனது கண்னையும் இழந்தார்.

இந்நிலையில் 2002 ஆம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் இருவரும் ஒன்றாக செயற்படகூடிய சூழல் ஏற்பட்டது. இந்த காலப்பகுதியில் அமைச்சரவையை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. எனினும் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை புறந்தள்ளி விட்டு தனக்கு நாட்டையும் விடவும் கட்சித்தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசியல் தீர்மானத்தை எடுத்திருந்தார். அதன்போது அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்பது தனக்கு தெரியாது. எனினும் சுதந்திரக் கட்சியினர் அந்த முடிவினை எடுக்கும் வரைக்கும் அவரை கொண்டு வந்து சேர்த்தனர்.

எனவே தற்போதும் அவ்வாறானதொரு நிலைமை தோன்றியிருக்கின்றது. ஆகவே ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் எற்படுத்திய ஜனநாயக புரட்சியை பின்நோக்கி  செலுத்துவற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முனைகின்றாரா என்பது தெரிய வேண்டியுள்ளது. ஜனவரி புரட்சியை பிற்போடுவதற்கு சுதந்திரக் கட்சியினர் செயற்ப்பட்டு வருகின்றனர்.

3 comments:

  1. நல்ல பேச்சு. ஆனால் நீங்கள் LTTE யுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது முஸ்லிம் மக்களை புறக்கணித்து செயல்பட்டீர்கள் அதனால் ஹகீம் உங்களுடன் இருந்தும் நீங்கள் தோல்வியை (பாராளுமன்ற தேர்தலிலும் சரி ஜனாதிபதி தேர்தலிலும் சரி) தழுவிநீர்கள் காரணம் கணிசமான முஸ்லிம்கள் ராஜபக்ச அணியை ஆதரித்ததுதான். அதற்கான உதாரணம் அதாவுல்லா கூட்டனி தேர்தலில் வெற்றி பெற்றது (ஹரீசும், அன்வர் இஸ்மாயில் இந்த அணியில் இருந்தனர்). எனவே ரணில் அவர்களே நீங்கள் முஸ்லிம் சமூகத்தை கவனத்தில் கொண்டு அரசியல் புரிய வேண்டும். பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஹக்கீமுக்கு கடிவாளம் விடுவதற்கு ரிசாத் வதுர்டீனை பாவிப்பீர்கலானால் அது உங்களுக்கு கைசேதமாகவே அமையும் என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் சிந்திக்கும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. Do not believe SLMC.u can remember last election.after national list they went for money to Rajapaksha.they will do the same

    ReplyDelete
  3. 18 th amendment pass ed in parliment with slmc support.slmc channged our country back to rubbish.they did for money and power

    ReplyDelete

Powered by Blogger.