Header Ads



5 மாவட்டங்களில் சுயேற்சைக் குழுக்களை களமிறக்க, ஆசாத் சாலி ஆயத்தமாகிறார்

நாளை செவ்வாய்கிழமைக்குள் தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காதவிடத்து கண்டி, கொழும்பு, அம்பாறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுயேற்றைகக் குழுக்களை களமிறக்கி எதிர்வரும் பாராளுமுன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தேசிய ஐக்கியத்திற்காக பாடுபடும் என்னை சிங்கள சமூகங்களும் அவற்றின் தலைமைபீடங்களான அஸ்கிரியா மல்வத்தை பீடாதிபதிகளும் நன்கு அறிந்துவைத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களை நான் சந்தித்தபோது கண்டியில் ஐக்கிய தேசிய கட்சியில் 2 முஸ்லிம்களுக்கு மேலே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாமென தாம் ஒருபோதும் கூறவில்லையென அவர்கள் திட்டவட்டமாக என்னிடம் தெரிவித்தனர்.

இருந்தபோதும் கண்டியில் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியன் வேட்பாளர் மனுவில் 2 முஸ்லிம்களுக்கே இடம்தருவோமென அடம் பிடிக்கின்றனர். கடந்த காலங்களில் கண்டியிலிருந்து 4 முஸ்லிம்கள் தெரிவாகியிருந்தனர். இம்முறை அந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடனே முஸ்லிம் வேட்பாளர்கள் குறைவாக நிறுத்தப்படுகின்றனரோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

அந்தநிலையில் நாளை செவ்வாய்கிழமைக்குள் தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காதவிடத்து முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை காப்பாற்றுவதற்காக 5 மாவட்டங்களில் சுயேற்சைக் குழுக்களை களமிறக்க நான் தீர்மானித்துள்ளேன். இது மக்களுக்காக, நமது சமூகத்திற்காக நான் மேற்கொண்ட தீர்மானமாகும் எனவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

15 comments:

  1. முஸ்லிம்கள் பிளவுபட்டதால் தான் இவ்வாறு சீரழிய வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  2. U can contest alone.time to time don't act that u r the true man for Muslim community. Bcos of u n ur brother BBS came to know abt wahabism n salafism.now u guys r shouting.u can't blackmail n contest for election.everyone knows abt ur power.

    ReplyDelete
  3. அஞ்சா நெஞ்சம் கொண்ட ஆசாத் சாலி அவர்களே, உங்களுக்கு ரோசாம் எப்பவுமே கொஞ்சம் சுள் என்றுதான் இருக்கும். அவசரபடாதீர்கள் கொஞ்சம் ராஜதந்திரத்தையும் பாவிக்க வேண்டும். தொடர்ந்து ரணிலுடன் பேசுங்கள். உங்களுக்கும் ரணிலுக்கும் நெருங்கியவர்கள் மூலம் ரணிலுக்கு அழுத்தம் கொடுங்கள். இந்த அழுத்தங்களும் பேச்சு வார்த்தைகளும் ஆகக் குறைந்தது ரணிலை உங்களுக்கு ஒரு நேசனல் லிஸ்டில் எம்பி பதவியை தருவதற்கு முன்னகர்த்தி செல்லுங்கள் என்பது தான் எங்களது பணிவான வேண்டுகோள். ஏனெனில் நீங்கள் சுயேட்சியில் களம் இறங்கினால் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது அதே நேரம் உங்களது அணியும் நீங்களும் ஒரு ஜோகராகவே முஸ்லிம் மக்களால் கணிக்கப்படும் அதே நேரம் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதரடிக்கப்படுவதட்கு நீங்கள் ஒரு காரண கர்த்தாவாக அமைந்து விடுவீர்கள். நீங்கள் ஹகீமுடனும் பேசலாம் என்பது எங்களது அன்பான வேண்டுகோள் அது ஹக்கீமுக்கும் நல்ல பலத்தை சேர்க்கும் என்பது எமது கணிப்பாகும்.

    ReplyDelete
  4. குருவி மிக நல்ல கருத்தையே முன்வைத்துல்லீர்கள் நண்றீ அவசரம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதே உன்மை

    ReplyDelete
  5. Senra murai maahana sabayyil kandy makkalin waakkuhalal idaththay thakka waythu kondadhe allamal emakkaha saydhu kilithadhu edhuwum illay.immuray muslim perumpaanmayyaha waalum idamgalil suyetchayyaha kalamirangi irukkum aasanamgalilum man alli poda muyatchippadhu umadhu suya nalame ena saadharana makkalukkum purihiradhu thalaiwa

    ReplyDelete
  6. இந்த கப்று வணங்கிதான் முஸ்லிம்களின் பிரச்சினை எல்லாத்துக்கும் முதல் காரணி.

    ReplyDelete
  7. He is the person who gave publicity to the BBS.(even family went to pray at Gangarama).we need quality leaders like Minister Rishad Badiuddeen.(this man working for NGO's and Tamil diaspora).

    ReplyDelete
  8. Mr Azath think about the community before you take any decision not about your position or party.

    ReplyDelete
  9. Do not worry you will get from national list
    First we have to give a chance to our senior UNP member . Be calm You will be a winner.

    ReplyDelete
  10. Azad u don't worry allah almighty will send u to parliament with blessings of prophet saw & badru sahabas

    ReplyDelete
  11. Mr Sally
    we know that you feel for the community
    try to get nomination from unp
    if not don't try to make you a joker
    you will loose your popularity and the sympathy
    going alone that shows you are selfish
    nothing like scarifying for the shake of community
    Allah will reward you here and THERE
    Be patient

    ReplyDelete
  12. I think he'll going to lose his provincial seat and he'll not get a single seat for Parliament

    ReplyDelete
  13. If you make any independent group our muslims votes only going to distribute here and there. But we won't get any member of parliament so please try follow kuruvi advice. Allah will help you

    ReplyDelete
  14. பாதுஷா,

    அரசியலில் இறங்கி தனது சமூகத்தை பிரதிநிதித்துவம் புரிவதற்கு ஒருவன் கப்று வணங்கியாக இருந்தாலென்ன கத்தரிக்காய் தின்பவனாக இருந்தாலென்ன..

    பாதுஷா நீங்கள் பெரிதாக மதிக்கும் கப்று வணங்காத கோட் சூட் நாரே தக்பீர் கூட்டம் காசுக்கும் பதவிக்கும் பேராசைப்பட்டு சமூகத்தைக் காட்டிக்கொடுத்ததைப்போல ஆசாத் சாலி காட்டிக்கொடுக்கவில்லையே..

    உங்களுடைய ஆட்களைப்போல பள்ளிகள் உடையும்போதும் ஆட்சியாளனின் காலடியை நக்கிக்கொண்டு கிடக்கவில்லை இந்த கப்று வணங்கி.

    அவர், மைத்திரி வெல்லும் கடைசி நிமிடம்வரை காத்திராமல் ஆரம்பத்திலிருந்தே தனது சமூகத்திற்கு எதிரானவர்களுக்கு எதிராக இறங்கி அநியாயத்தை எதிர்த்து வந்தவர்.

    அவருக்கு இல்லாத உரிமையா..?

    ReplyDelete

Powered by Blogger.