Header Ads



மைத்திரியை நம்பியதால் ஏமாற்றம், மகிந்தவின் மேடையில் ஏறினால் அவமானம் (வீடியோ)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக்களின் போது, சில உறுப்பினர்கள் எதிர்பாராத சம்பவங்களுக்கு முகங் கொடுக்க நேரிடுகிறது.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் மொனராகலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இவ்வாறான இன்னல்களுக்கு முகங் கொடுத்தனர்.

அவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, கூடியிருந்த சில தரப்பினர் கூக்குரலிட்டு உரைக்கு இடையூறை விளைவித்துள்ளனர்.

இதனிடையே, மொனராகலையில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தின் போது ஏற்பட்ட அளெகரியம் தொடர்பில் எமது hfm செய்தி பிரிவு அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், சிலர் தம்மை பார்த்து கூக்குரலிட்டதாகவும் அதனால் தாம் அளெகரியங்களுக்கு உள்ளாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மாத்தளையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க இவ்வாறான சம்பவத்திற்கு முகங் கொடுத்தார்.

மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில்  பங்கேற்றிருந்த சிலர் கூக்குரலிட்டனர்.

இதனையடுத்து இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க இந்த சம்பவத்துடன் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, சிலர் தம்மை பார்த்து கூக்குரலிட தயராகவுள்ளதாக  சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி நிதியமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி களுத்துறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்ததாக  அவர் குறிப்பிட்டுள்ளார். வீடியோ

No comments

Powered by Blogger.