Header Ads



18ம் திகதிக்கு பின்னர், அனைத்தையும் ஆரம்பிப்போம் - மகிந்த சூளுரை


ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. நாங்கள் மேற்கொண்ட கமநெகும, மகநெகும என கிராமங்களுக்கான 58 ஆயிரம் அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மறைமுகமான வேலைவாய்ப்புகளை பெற்றிருந்த 15 லட்சம் பேர் 6 மாதம் என்ற குறுகிய காலத்தில் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். இதுதான் எமனாட்சி.

நாங்கள் 18ம் திகதிக்கு பின்னர் ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் ஆரம்பிப்போம்.

அத்துடன் தொழில் வாய்ப்புகளை இழந்த 15 லட்சம் பேருக்கு மீண்டும் அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுப்போம் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை தாம் நிராகரிப்பதாகவும் 117 ஆசனங்களை கைப்பற்றி தாம் ஆட்சி அமைக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆமாம் நீங்கள் சொல்வது தான் முற்றிலும் சரி. வெற்றி பெற்றதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளான போதைப்பொருள் வியாபாரம், குண்டர்கள் அராஜகம், வெள்ளை வேன் கடத்தல், ஊடக அடக்குமுறை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, பள்ளியுடப்பு, மக்கள் சொத்தை சூறையாடல், கொலை, கொள்ளை போன்ற உங்களின் 58 ஆயிரம் அபிவிருத்தி பணிகளை தொடங்கிவிடுங்கள்

    ReplyDelete
  2. inde ma manitherukku tholviyadainde pinputhan seithe thaverukel niyafekem varukirethu , nambividatheerkel

    ReplyDelete

Powered by Blogger.