Header Ads



மொஹமட் முஜாஹித் வீட்­டில் தங்­கி­ய, ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர்

போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. ஆகவே, இது தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்­சரும் கம்­பஹா மாவட்­டத்தின் ஐ.தே.க.வேட்­பா­ள­ரு­மான ரஞ்சன் ராம­நா­யக்க கோரிக்கை விடுத்தார்.

போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்­வி­ப­ரங்­களை ஔடத கட்­டுப்­பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சம­ர­சிங்க உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும்.இல்­லையேல் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடைப்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்:

முக்­கிய போதைப்­பொருள் புள்­ளி­யான மொஹமட் முஜாஹித் என்­பவர் மலே­சி­யாவில் இருந்து கொண்டு இலங்­கையில் போதைப்­பொருள் வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கான செல­வி­னையும் முஜாவே பொறுப்­பேற்­றி­ருந்தார்.

இந்­நி­லையில் இலங்­கையை போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் கேந்­திர நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொண்டு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

மொஹமட் முஜாஹித்தின் மலே­சி­யா­வி­லுள்ள வீட்­டிற்கு பல தட­வைகள் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லுள்ள அனை­வரும் சென்று தங்­கி­யுள்­ளனர்.இதற்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் உள்­ளன. போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் உத­வியை கொண்டே ராஜ­ப­க்ஷ­வினர் தனது வாழ்க்­கையை கொண்டு நடத்­தி­யுள்­ளனர்.

மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­டது மாத்­தி­ர­மின்றி போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் தம்­முடன் ஒன்று சேர்த்­துள்­ளனர்.
அத்­துடன் போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. யுத்­ததை மைய­மாக கொண்ட செல்வம் திரைப்­ப­டமும் கூட மொஹமட் முஜாஹித்தின் அனு­ச­ர­னை­யு­டனே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அது மாத்­தி­ர­மின்றி செல்வம் திரைப்­ப­டத்தின் வெளி­யிட்டு வீழா மிகவும் கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிகழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே வருகை தந்­தி­ருந்தார்.

மேலும் இந்த திரைப்­படம் மஹிந்த ராஜ­ப­க்ஷவை போற்றும் விதத்­திலே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த படம் ஜனா­தி­பதி தேர்தல் காலங்­க­ளி­லேயே வெ ளியி­டப்­பட்­டது.

இது தொடர்பில் ராஜ­ப­க்ஷ­வினர் மௌனம் காத்து வரு­கின்­றனர்.போதைப்­பொருள் வர்த்­தகர் முஜாஹித்துடன் தொடர்பு உள்­ளதா என்­பது தொடர்­பான உண்­மையை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.

முஜா போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்ளி என்­பது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் என்ற வகையில் அறிந்­தி­ருக்­க­வில்­லையா? அல்­லது அவர்­க­ளது உள­வுப்­பி­ரி­வினர் அறி­விக்­க­வில்­லையா என்­ப­தனை நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.

மேலும் போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த பெயர்ப்பட்டியல் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க அச்சப்படுகின்றார்.அவ்வாறு அச்சப்படுவாராயின் அவர் அந்த பதவியிலிருந்து உடனடியாக வௌியேற வேண்டும்.

ஆகஸ்ட 18 ஆம் திகதி குறித்த பட்டியலை வெளியிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.