Header Ads



மீண்டும் அரசியலில் ஈடுபட, மற்றவர்கள் போன்று எனக்கு பைத்தியம் கிடையாது - சந்திரிக்கா

அரசியலில் ஈடுபடும் எவ்வித உத்தேசமம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கு மற்றைய சிலரைப் போன்று தமக்கு எவ்வித விசரும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எவ்வித அவசியமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் விடயங்களை மறைக்க விரும்பும் தரப்பினரே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள விரும்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கையில் நான் எவ்வளவோ பணம் பொருள் என செலவழித்துள்ளேன். நான் இருந்ததை அழித்துள்ளேனே தவிர சம்பாதிக்க வில்லை.

நான் ஒருபோதும் மனிதப் படுகொலை யிலேயே வெள்ளை வான் சம்பவங் களிலோ அல்லது வேறெதும் ஊழல் மோசடிகளிலோ ஒருபோதும் ஈடுபட வில்லை. அதனால் எனக்கு பதவிக்கு வருவதற்கு எந்த ஆசையும் கிடையாது.

இவ்வாறான ஊழல் மோசடிகளை மறைப்பதற்கும் அதனை மூடிவிடு வதற்காகவே சிலர் பதவி மோகம் கொண்டு மீண்டும் பதவிக்கு வர எத்தனித்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினர்.

2 comments:

  1. A meaningful speech and thoughtful comparision! She retired from the politics with great achievement and high respect from alll level world wide.

    Mahinda had been thrown out by the public from the Presidency before the end of his term.miserably . Even after that great fall, he is dreaming the premier post and still hanging on the politics with the hatredness of the majority.

    ReplyDelete

Powered by Blogger.