Header Ads



ஜனாதிபதி மைத்திரி சுதந்திர கட்சி, தலைமையை ஏற்றது தவறான செயல் - சோபித தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டுமென நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரவித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும்பொதுத் தன்மையுடன் இருந்தால் எதிர்காலத்தில் அனைத்து தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நாட்டுக்கு பொருத்தமான அரசியல் சாசனமொன்றை அமைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கட்சி சார்பான தன்மைக்குள் இருப்பது ஆரோக்கியமானதாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் பொது வேட்பாளராகவே இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கு அனைவரையும் அணி திரளுமாறு ஜனாதிபதி கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அழைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், தமிழ் மக்களும் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதம் பாராட்டாது ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதும் ஓர் தவறான செயலாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

3 comments:

  1. Yes Yes Yes Yes ....You Are Absolutely Right 100%

    ReplyDelete
  2. Yes that was only one option . But what he did was also right. He has a right to be
    the leader of his party and Mahinda is the culprit who's trying to control some of the
    members of his party after handing the leadership over to Mytree. It looks like Mahinda has started to pay back to Ranil for what he did to UNP ! Winning the
    presidency means becoming the leader of his party too which has been the norm
    in our politics so far. Because of revenge politics in our country Mythree and Ranil
    hesitated to put wrong doers behind bar in Welikada and instead allowed to stay in
    hospital beds ! And the wrong doers were non other than his own party men ! Another point in question is whether the wrong doers were licenced to go out and
    apologized to the public instead of going Welikada ! Either way, My3 is a better
    president .

    ReplyDelete
  3. கட்சித்தலைமையைப் பொறுப்பேற்றது தவறு அல்ல. மாறாக அந்தக்கட்சிக்குள்ளிருக்கும் திருட்டுக்கும்பலை படிப்படியாக ஓரம்கட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதே தவறு. இராஜதந்திர காரணங்கள் இருந்தாலும் இதை செய்திருந்தால் இன்றைய குழப்பம் இருந்திருக்காது.

    எவ்வாறாயினும் திருட்டுக்கும்பலையும் அந்தக் கும்பலைப் பாதுகாத்துக்கொள்ள அதிகாரத்தை எவ்வழியிலேனும் பெற்றுவிடத்துடிப்பவர்களையும் (மாமியார்) வீட்டுக்கு அனுப்பி வைப்பது ஒன்றே மக்களுக்கு நன்மைபயப்பதற்கான விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.