Header Ads



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, விடுக்கும் விசேட அறிக்கை

ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்து அல்லாஹ்வின் அருளை (ரஹ்மத்தை) பாவ மன்னிப்பை (மக்பிரத்தை) வேண்டி நிற்கும் நாம்; நாட்டிலே சமாதானமும் , ஐக்கியமும், நிம்மதியான வாழ்வும் கிடைக்க அதிகமதிகம் பிரார்திக்க வேண்டும்.

ரமழான் மாதத்தின் நடுப்பகுதியில் தான் ஸஹாபாக்களின் வீர வரலாறுகள் பல பதியப்பட்டிருக்கின்றன, 17 ஆவது நாளன்று நடைபெற்ற தியாகத்தின் முலமே உலகில் இஸ்லாம் ஸ்திரம் பெற வழி வகுத்தது. அவ்வுத்தமத் தோழர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொண்ட நல்லோர் ஆவார்கள்.

எனவே, அந்த ஸஹாபாக்களின் தியாக வரலாறுகளின் சிறப்புகளை மகிமைகளை எடுத்துச் சொல்லும் ஒரு சந்தர்பமாக நடுப்பகுதியை பயன்படுத்திக்கொள்வது பொருத்தமாகும். சகல ஸஹாபாக்களும் அல்லாஹ்வின் திருப்திக்குட்பட்டவர் ஆவர், அவர்களின் கௌரவத்தை எந்த வகையிலும் தூற்றுவதோ இகழ்ந்துரைப்பதோ அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித்தர வல்லதாகும்.

எனவே, அவ்வுத்தம ஸஹாபாக்களின் மாண்புகளை எடுத்துக்கூறி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் இருந்து வரவும் , ஸஹாபாக்களை தூற்றுதல் இழிவுபடுத்துதல் போன்ற பாவச்செயல்களிலுருந்து தவிர்ந்து வாழவும் பொதுமக்களுக்கு உபதேசிக்குமாறு நாட்டிலுல்ல சகல உலமாக்களையும் , கதீப்மார்களையும் , இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

அஷ் - ஷெய்க் எச். உமர்தீன்
பிரச்சாரக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. May Allah Bless you for this effort, But please remove those cuplrits from Jammiyathul Uleme, I mean those Jamath E islami members, who suppoted SHIA in the past and even keeping good connection with them.

    We do not trust Jammiyathul Ulema as a representative of Ahlussunnathu Wal Jama, while keeping those, who promoted SHIAISM in Srilanka by writing IRAN revolution as Islamic revolution in their Monthly Mewgains and still writing PREFACE to SHIA BOOKS.

    Let see what Jammiyathul Ulema concisl does in this regard.

    ReplyDelete

Powered by Blogger.