Header Ads



நிராகரிக்கப்பட்ட மஹிந்த­வுடன், மைத்திரி இரகசிய தொடர்பு - அநுரகுமார குற்றச்சாட்டு

மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய தொடர்புகளைப் பேணுவதாக ஜே.வி.பி. குற்றஞ் சுமத்தியுள்ளது.

மஹிந்தவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் பேச்சு நடைபெற்றுள்ளது என்றும், இருவரும் திட்டமிட்ட அடிப்படையில் அதை நிராகரித்துள்ளனர் என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ச­வுக்கும் இடையில் சபா நாயகர் இல்லத்தில் பேச்சு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும்,  இறுதிச் சந்தர்ப்பத்தில் அந்தப் பேச்சு வேறொரு இடத்தில் இடம்பெற்றது.  

இருவரும் தாங்கள் சந்திக்கவில்லை என அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தப் பேச்சின் ஒரு கட்டமாக, பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு, அக்கட்சியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. பாலுக்கும் காவல், பூனைகளுக்கும் தோழனாய் இருப்பது சாத்தியமா..?

    சாத்தியமாயின் சந்தோஷமே!

    ஆனால் மைத்திரியாரே, அந்த வஞ்சகத் திருட்டுப் பூனைகளை கண்காணிப்பதில் கவனமிருக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.