Header Ads



"பஸீர் சேகுதாவூதிற்கு இடமளிக்காதீர்கள்"

-ஏ.எல்.டீன்பைரூஸ்-

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூதிற்கு கட்சித் தலைமை இடமளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பஸீர் சேகுதாவூதின் வியூகம் அறிந்து கட்சித் தலைமை நடைபெவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளித்தால் தான் போட்டியிடுவேன் என தெரிவித்து இருந்தார். இன்றுவரை பஸீர் சேகுதாவூத் நேரடியாகவும், மறைமுகமாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி தேடித்தந்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காகவே வியூகம் வகுத்திருந்தார் என்பதை கட்சித் தலைமை மாத்திரம் அன்றி, ஒவ்வொறு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் அறிவார்கள்.

பஸீர் சேகுதாவூத் போன்ற அரசியல் வியாபாரிகளின் கபட நாடகங்களால் முஸ்லிம் சமூகத்தை இனி ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காது முஸ்லிம் சமூகத்திற்கு மகிந்த அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்து இருந்தும், தான் வகுத்த வியூகத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட முழு அமைச்சுப்பதவிக்கு விசுவாசம் காட்டும் வகையில் முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் என கட்சி ஒரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் விட்டு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியதுடன் கட்சியையும் அதன் தலைமையும் அத்தேர்தலில் முடிவெடுக்க விடாமல் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்ததுடன் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து இறைவனை பிரார்த்தித்து காதல் கடிதம் எழுதிய மீண்டும் ஒருமுறை முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்க வியூகம் வகுத்தார்.

பஸீர் சேகுதாவூத், அழகாக வியூகம் அமைத்து தனது சொந்த வாழ்கையை மட்டும் மேம்படுத்திக் கொண்டுள்ளாரே அன்றி, அவரது வியூகத்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியோ அக்கட்சிக்கு வாக்களித்த மக்களோ எதுவித பயனும்பெறவில்லை. இன்றுவரை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதியமைச்சராகவும் ஒரு முறை முழு அமைச்சராகவும் இருந்து அவர் வகுத்த வியூகத்தால் சாதித்தது என்ன?

அவர் வகுத்த வியூகத்தால் கட்சிக்கு வெளியிலிருந்து கட்சிக்கு உள்வாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர் வகுத்த வியூகத்தால் கட்சி எத்தனை வீதம் வளர்ச்சியடைந்துள்ளது? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் தான் சார்ந்த மாவட்டத்தில் எத்தனை வீதம் கட்சி வளர்ச்சி கண்டுள்ளது? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் தனது சொந்த ஊரில் கட்சியை எத்தனை வீதம் வளர்தெடுத்துள்ளார்? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் வாக்களித்த மக்கள் அடைந்த நண்மை தான் என்ன?

முழுக்க முழுக்க அனைத்தும் தனது சுயநலன் சார்ந்த வியூகங்களே
பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் கட்சித் தலைமைக்கு மகுடம் ஊதி தேசியப்பட்டியலை பெற்றுக் கொள்ளுகின்ற வியூகம், பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் கட்சியைக் காட்டிக் கொடுத்து கட்சிக்கும் அதன் தலைமைக்கும் தெரியாமல் முழு அமைச்சுப் பதவி பெற்றுக் கொள்ளுகின்ற வியூகம், பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கரையோர மாவட்ட கோரிக்கையை ஏனைய கட்சிக் காரர்கள் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக இருந்து காட்டிக் கொடுத்து தடுத்து நிறுத்திய வியூகம் பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் வேண்டும் 

முஸ்லிம்களுக்கு ஒரு தனியான மாவட்டம் இருப்பதில் என்ன தவறு என பட்டி தொட்டியெல்லாம் பேசி அமைதியாக இருக்கின்ற சிங்கள, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடுகின்ற மகிந்த ராஜபக்ஷவின் சதித் திட்டத்தை அரகேற்றுகின்ற வியூகம் இவ்வாறு எத்தனையோ துரோகத்தனமான வியூகங்களை சான்றுவிக்க முடியும் தனது சுயநலனுக்காக வியூகம் வகுக்கின்ற பஸீர் சேகுதாவூத் அவர்களுக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளமன்ற தேர்தல் வேட்ப்பாளர் பட்டியலில் ஓரு போதும் இடமளிக்கக் கூடாது அதனையும் மீறி போட்டியிடுவதற்கு தலைமை இடமளித்தால் இன்னும் பல மடங்கு கட்சி வீழ்ச்சியடையும் என்பதுடன் கட்சியின் வீழ்ச்சிக்கு தலைமையே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியேற்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. முஸ்லிம் காங்கரஸ் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எக்காரணம் கொண்டும் பசீருக்கு வேட்பு பானு தாக்கல் செய்ய இடம் கொடுக்கக்கூடாது. இவர் மறை முகமான முஸ்லிம்களின் எதிரி முஸ்லிம் கோன்றேஸ் எவருக்கு எடம் கொடுத்தால் தேர்தலின் பின் மகிந்தவுடன் கூட்டு சேருமாறு கட்சிக்கு கடுமையான அழுத்தம் கொடுப்பார் சந்தேகம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.