Header Ads



மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி - விஞ்ஞனிகளின் புதிய கண்டுபிடிப்பு

இணைய தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி விரைவில் சாத்தியம் எனக் கூறப்படுகிறது.

வேகமான இன்டர்நெட் இணைப்புக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது டேட்டாவை கொண்டுச்செல்லும் கண்ணாடி இழை கேபிள்கள் தான். டேட்டாவை அதிவேகமாகவும் தூரமாகவும் கொண்டுச்செல்ல இந்த கண்ணாடி இழை கேபிள்களின் இயல்பை விட அதிக அளவு மின்சாரம் செலுத்த வேண்டும். அப்படி செய்யும் போது டேட்டா சிதைவு ஏற்படுகிறது. எனவே அதிவேக இன்டர்நெட் வசதி சாத்தியம் இல்லாமல் இருந்தது.

தற்போது குவால்காம் இன்ஸ்டிடியூட் ஆப் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்ணாடி இழை கேபிள்களில் மின்சாரம் செலுத்த இருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளனர். மேலும் தற்போது கண்ணாடி இழை கேபிள்களில் முக்கிய பாகமான மின்னணு ரீஜெனரேட்டர் மற்றும் ரிப்பீட்டர்கள் தேவையில்லை என்பது தான் இதில் முக்கியமான விஷயம். 

இந்த புதிய முறையை பயன்படுத்தி சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மின்னணு ரீஜெனரேட்டர் மற்றும் ரிப்பீட்டர்கள் இல்லாமல் அதிவேக இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி சாதனைப் படைத்துள்ளனர். இந்த கண்டுப்பிடிப்பு நடைமுறைக்கு வரும் போது மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி சாத்தியம் ஆகும்.

No comments

Powered by Blogger.