Header Ads



துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக பேரணி - அடித்துவிரட்டிய பொலிஸார்

துருக்கியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் விரட்டியடித்தனர்.

துருக்கியில் கடந்த சில வருடங்களாக ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான பேரணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தலைநகர் இஸ்தான்புல்லில் 13வது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான பேரணி நேற்று நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் துருக்கியின் ஜனாதிபதியான ரீகெப் டாய்யிப் எர்டொகனுக்கு(Recep Tayyip Erdogan) எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் கையில் இருந்த வானவில் வண்ண கொடியை அசைத்தபடி கோஷமிட்டனர்.

பொலிசார் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

எனவே பொலிசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. லூத் நபி காலத்தில் அல்லாஹ்வினால் சபித்து அழிக்கப்பட்ட கூட்டம் இப்போதும் அலையிது போல

    ReplyDelete
  2. Allahu akbar!!! Meendu oru jahileeyya vaaa??

    ReplyDelete

Powered by Blogger.