Header Ads



மெதமுலனயிலிருந்து உரையாற்றுகிறார் மஹிந்த - சமாதானப்படுத்த இன்றும் முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

இதன்படி, மாத்தறை தெவிநுவர உபுல்வன் தேவாலயத்திற்கு அருகாமையிலிருந்து லட்சக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத் தொடரணியாக மஹிந்தவை பார்க்கச் செல்ல உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“அமைதியாக இருந்தது போது நாடு படு குழியில் செல்வதனை தடுக்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்சவிடம் நாளை கோரிக்கை விடுக்க உள்ளனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரும்பாலும் நாளை மஹிந்த தீர்க்கமான முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு இன்று காலை கண்டியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மஹிந்த ராஜபக்சவின் தரப்பு மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் பொதுத் தேர்தலின் போது இணைந்து செயற்படுவது தொடர்பில் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்பு மனு தொடர்பில் கருத்து பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.