Header Ads



உலக சமாதான சுட்டியில், இலங்கைக்கு 114ம் இடம்

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட பொருளியல் மற்றும் சமாதான நிறுவகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

162 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பூட்டான் 18ம் இடத்தை வகிப்பதாகவும், நேபாளம் 62 இடத்தையும், பங்களாதேஸ் 84 இடத்தையும், இந்தியாவும் 143 இடத்தையும் பாகிஸ்தான் 154 இடத்தையும், ஆப்கானிஸ்தான் 160 இடத்தையும் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வரிசையில் ஐஸ்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகள் முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறைகள், இராணுவமயப்டுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.