Header Ads



விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற, அமெரிக்க விண்கலம் வெடித்துச் சிதறியது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்ற அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது.

இந்த விகலத்தின் சிறிய பாக ங்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் விழுந்தன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப்கேனவரால் விமானப்படை தளத்திலிருந்து ஞாயிறன்று புறப் பட்ட விண்கலம் இரண்டரை நிமி டத்தில் வானில் வெடித்துச் சிதறியது.

இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் அதில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு தேவையான முக்கியமான பொருட்கள் இழந்திருந்தபோதும் அங்கிருக்கும் வீரர் களுக்கு தற்போதைக்கு எந்த சிக்க லும் இல்லை என்று நாஸா குறிப் பிட்டுள்ளது.

இந்த பொருட்கள் இழந்த போதும், சர்வதேச விண்வெளி நிலைத்தில் இருக்கும் மூன்று விண்வெளி வீரர் களுக்கும் ஒக்டோபர் கடைசி வரை தேவையான உணவு, நீர் மற்றும் பொருட்கள் சேமிப்பில் இருப்பதாக வும் அங்கு ஜப்பான் மற்றும் ரஷ் யாவின் சரக்கு விண்கலங்கள் செல்லவிருப்பதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது.

முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 3 தொன் பொருட்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி மீண்டும் திரும்பி வான்வெளியில் எரிந்து சாம்பலானது.

No comments

Powered by Blogger.