Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு சவால் விடுத்துள்ள JVP

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு எதிராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் குற்றம் சுமத்தப்பட்டதற்கமைய அவரை கைது செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

குருணாகல் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் கட்சி பொது செயலாளரை கைது செய்ய ஆயத்தமா என தற்போது நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்கிறோம். ஏனென்றால் பொது சொத்து சட்டத்தின் கீழ் அவர் களவு செய்துள்ளார்.

அவர் பெற்றோலிய அமைச்சராக செயற்பட்ட போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணம் எடுத்து தேர்தலின் போது உலர் உணவு பொருட்களை மக்களுக்கு பகிர்வதாக கூறி 2500 பெறுமதியான 2300 உணவு பொதிகள் பெற்று அதனை அவரது வீட்டு களஞ்சிய அறையில் வைத்திருந்தார்.

அப்பொருட்களை பெறுப்பேற்றுக்கொண்ட இளைஞன் சதோசவில் இருந்த பொருட்களை அனுர பிரியதர்ஷன யாப்பா வீட்டில் இறக்கியதாக சாட்சி கூறுகிறார்.

ஜொன்ஸ்டன் மீது சுமத்தப்பட்டுள்ள அதே குற்றசாட்டு அநுர யாப்பாவிற்கும் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் ஜொன்ஸ்டன் உள்ளே இருந்தார், அனுர யாப்பா வெளியே இருக்கின்றார்

ஜனாதிபதி தலைவராக செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அநுர யாப்பா என்பதனால் தான் அவர் கைது செய்யாமல் இருப்பதற்கு காரணமாகும்.

முடியும் என்றால் ஜொன்ஸ்டனை போன்று அனுர யாப்பாவையும் கைது செய்து காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.