Header Ads



"மகிந்த ராஜபக்சவுக்கு மனநிலை பாதிப்பு, என்பதை நான் அறியவில்லை" - ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவிற்கு அவரது மூளையில் உபாதை இருக்கும் என்று தான் எண்ணவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,

கேள்வி :  மகிந்த ராஜபக்ச தவறியேனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால். அது சம்பந்தமாக என்ன கூறுகிறீர்கள்.

பதில் : தவறுதலாக யாரும் போட்டியிடுவதில்லை. முடிந்தால் மாத்திரமே தேர்தலுக்கு வருவார்கள்.

கேள்வி : மகிந்த வரமட்டார் என்ற நம்பிக்கை உள்ளதா?.

பதில் : ஜனாதிபதியாக இருந்த அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கும் அளவுக்கு அவரது மூளையில் உபாதை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி :  அப்படியென்றால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?

பதில் :  ஆம். மகிந்த ராஜபக்சவுக்கு அப்படியான மனநிலை பாதிப்பு இருக்கின்றது என்பதை நான் இறுதிநாள் வரைக்கும் அறிந்திருக்கவில்லை. காரணம் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள், பாதுகாப்பு, வாகனங்கள் போன்றவற்றை கைவிட்டு விட்டு இரண்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் வீதியில் செல்ல அவர் தயாராக இருப்பார் என்று நான் எண்ணவில்லை.

அமைச்சராக இருக்கும் நான் பிரதேச சபை உறுப்பினராக விரும்புவேனா?. இல்லை. அதுபோலதான் அவரும் என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.