Header Ads



அங்கவீனமுற்றிருந்த 14 மாத குழந்தையை, கிணற்றில் வீசி கொன்றவனுக்கு மரண தண்டனை

ஒரு வயதும் இரண்டு மாதமும் கொண்ட தமது ஒரே மகனை கிணறு ஒன்றினுள் போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜா, குழந்தையின் தாயை விடுதலை செய்ததோடு, தந்தைக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 

நேற்று  புதன்கிழமை வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் நீர்கொழும்பு பிட்டிப்பனை பரதேசத்தினைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தங்கொட்டுவ எட்டியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியான கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாயே விடுதலை செய்யப்பட்டவராவார்.

இக்கொலைச் சம்பவம் தங்கொட்டுவ எட்டியாவல எனும் பிரதேசத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றுள்ளதோடு சித்தும் கௌசல்ய எனும் ஒரு வயதும் இரண்டு மாதமும் கொண்ட குழந்தையே இவ்வாறு கிணற்றில் வீசிக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் இருவம் (17 வயது) சிறுவயதிலேயே திருமணம் முடித்துள்ளனர்.

இந்நிலையில் இரு வருடங்களின் பின்னர் அவ்விருவருக்கும் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

 அக்குழந்தை அங்கவீனமுற்றிருந்ததால் குழந்தையின் பெற்றோருக்கிடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளது.

இவ்வாறு இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு குழந்தையின் தந்தை குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பிரதேச கிணறு ஒன்றினுள் குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தையே குழந்தையை கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்தே சிலாபம் மேல் நீதிமன்றத்தினால்  மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Death sentence ?

    Is Sharia Law orders it .................world used to cry. But if

    Country Law orders it .............. no comments of humanity.

    ReplyDelete

Powered by Blogger.