Header Ads



டுபாயிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவு, மேலும் நவீனமயமாகிறது

துபாயின் பாம் ஜுமைரா தீவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகபெரிய செயற்கைத் தீவாகும் 2001 ல் தொடங்கி  2009ல் திறக்கப்பட்டது. கரையில் இருந்து கடலுக்குள் ஒன்றரைக் கிலோ மீட்டர் நீளத்துக்குப் பாதை அமைத்து இரு புறமும் பேரீச்சை மர வடிவில் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுற்றியிருக்கும் பிறைவடிவிலான தீவு மட்டும் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பிற பகுதிகளுடன் இது சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் அவ்வழியே செல்பவர்கள் பேரீச்சை மர வடிவத்தைப் பார்க்க முடியும்.

மணல் மற்றும் பாறைகளை  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தீவு. சுமார் ஒன்பதரை கோடி கன அடி மணலும் 70 லட்சம் டன் பாறைகளும் இதற்குத் தேவைப்பட்டன. கடலில் பத்தரை மீட்டர் ஆழத்துக்கு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டது.ஹோட்டல்கள், பல வகையான குடியிருப்புகள், கடற்கரைகள், வணிக நிறுவனங்கள் அகியவை இங்கு உண்டு.

உலகம் முழுவதுமிருந்து தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கிறார்கள்.இங்கு 8 பிரபல ஹோட்டல்களில்  சுமார் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமாக  அறைகள் உள்ளது. எதிர்காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதால் பாம் ஜீமைராவில் புதியதாக வணிக வளாகங்கள்  தயாராகி வருகிறது . 800 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் தயாராகி வரும் நக்கீலின்  பிரம்மாண்டமான பாயிண்டே வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பிரபல ஷோரூம்கள் அமைய உள்ளது.  மேலும் 2020ம் ஆண்டுக்குள் புதிய ஹோட்டல்கள் இங்கு உருவாக்கப்பட்டு 11 ஆயிரம்  அறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.