Header Ads



ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை, அமெரிக்கா அனுப்பியதால் பரபரப்பு

ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை தவறுதலாக 9 மாகாணங்களுக்கும் தென் கொரியாவுக்கும் அமெரிக்க ராணுவம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவம் தலைமையகமான பென்டகனிலிருந்து மேரிலாந்து, டெக்சாஸ், விஸ்கான்சின், டெலாவேர், நியூ ஜெர்சி, டென்னசி, நியூயார்க் கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாகாணங்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகள் தவறுதலாக அனுப்பியது தெரியவந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதேபோன்று தென் கொரியாவுக்கும் ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை அனுப்பப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த மாகாணங்களில் உள்ள ராணுவ பரிசோதனை கூடங்கள் உஷார் படுத்தப்பட்டு நோய் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்கா கூட்டுப்படைகளுக்கான ராணுவ பரிசோதனை கூடத்திற்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச் சுழலில் நிலவும் நோய் கிருமிகள் குறித்த ஆபத்துக்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் ஆந்த்ராக்ஸ் வைரஸ் கிருமிகள் தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. ஆந்த்ராக்ஸ்  எனப்படும் ஒருவைகை வைரஸ் கிருமி கால்நடைகளில் உருவாகி மனிதர்களுக்கும் பரவும் ஒருவகை வெட்கை நோய் கிருமியாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதால் விபரீதத்தை தடுக்க அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.