Header Ads



சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் மீது, மிகபெரிய தாக்குதல்

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

உள்நாட்டு போர் தொடங்கிய கடந்த இரண்டு மாதத்தில் நடத்தப்பட தாக்குதலை விட மிக பெரிய தாக்குதலை சவுதி கூட்டுப்படைகள் நேற்று நடத்தியது. முக்கியமாக தெற்கு சனாவில் உள்ள ஹவுத்தி போராளிகள் முகாம் மற்றும் ஃபஜ் அட்டான் பகுதியில் உள்ள அவர்களின் ஆயுத கிடங்கு மீது சவுதி விமானப்படைகள் குண்டு மழை பொழிந்தன.

இதேபோல், செங்கடலை ஒட்டியுள்ள ஹொடைடா, சவுதி எல்லையின் வடபகுதியில் உள்ள ஹஜ்ஜா மற்றும் டலே மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஹவுத்தி போராளிகளுக்கு சொந்தமான முகாம்கள் மீதும் சவுதி விமானப்படைகள் நேற்று ஆவேச தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அருகில் இருக்கும் நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.