Header Ads



"சிரியாவில் யுத்தத்தை நிறுத்திவிட முடியும், ஆனால் அழிந்துபோன உயிரினத்தை மீண்டும் கொண்டுவர முடியாது"

சிரியாவின் பல்மைரா நகரை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு கைப்பற்றியதால் மிக அரிதான பறவை இனம் ஒன்று சிரியாவில் இருந்து முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு பல்மைரா நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வோல்ட்ரப் என்ற பறவை இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. ஐ.எஸ். ஆயுததாரிகள் நகரை கைப்பற்றியபோது, கூடுகளில் இருந்த இந்த மூன்று பறவை களை கைவிட்டு அவற்றின் காவலர்கள் சென்றுவிட்டனர்.

அந்தப் பறவைகளுக்கு என்ன ஆனது என்று தெரிய வில்லை. நான்காவது பறவை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அதிகாரிகளால் 1,000 டொலர் சன்மானம் அறிவிக் கப்பட்டுள்ளது.

இதில் காணாமல்போன பெண் பறவையை கண்டுபிடிப்பது மிகத் தீர்க்கமானதாகும் என்று இயற்கையை பாதுகாக்கும் சமூகம் என்ற லெபனானிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த பெண் பறவைக்கே எத்தியோப்பியாவில் பனிக்கால பயணப் பாதை தெரியும்.

அந்த பறவை இன்றி ஏனைய பறவைகளை விடுவிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை விடுவிக் கப்படாவிட்டால் சிரியாவில் இருந்து இந்த பறவையினம் முற்றாக அழிந்து விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "காலா சாரமும், இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தே செயற்படுகின்றன.

யுத்தத்தை நிறுத்திவிட முடியும். ஆனால் அழிந்துபோன உயிரினத்தை மீண்டும் கொண்டுவர முடியாது" என்று இயற்கையை பாதுகாக்கும் சமூகம் அமைப்பின் தலைவர் அசாத் சர்ஹால் குறிப்பிட்டார்.

சிரியா மற்றும் மொரோக்கோ நாடுகளில் மாத்திரமே காணப்படும் இந்த பறவை இனம் ஒட்டுமொத்தமாக சுமார் 500 மாத்திரமே உள்ளது.

மனிதர்கள் வேட்டையாடுவதாலும் பூச்சிக்கொல்லி மருந்து களின் உபயோகத்தினாலும் காடுகள் அழிக்கப்படுவதாலும் இந்த பறவை இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.

சிரியாவின் விலைமதிப்பற்ற பண்டைய கலைப்பொருட்கள் இருக்கும் பல்மைரா நகரை ஐ.எஸ். கடந்த வாரம் கைப்பற்றி யது.

இதனால் அங்கிருக்கும் ஐ.நா. மரபுரிமை சொத்துகளும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

No comments

Powered by Blogger.