Header Ads



முகமது அசாருதீன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் (டிரைலர்)

சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவதில் பாலிவுட் அதிக ஆர்வம் காட்டிட்டு வருது . ஓட்டப்பந்தைய வீரர்  மில்கா சிங் கின் வாழ்க்கையை  பாக் மில்கா பாக் என்று படமாக எடுத்தனர்.மேரி கோம் இன் வாழ்க்கையை படமாக எடுத்தனர்.

இவ்விரு படங்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து கபில் தேவ் இன் வாழ்க்கையை படமாக எடுத்து வருகின்றனர்.

இப்ப அந்த வரிசையில தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வாழ்க்கையை படமாக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட்டில் முன்னணி ஆட்டக்காரராக இருந்த அசாருதீனின் சொந்த வாழ்க்கை பரபரப்பும் விறு விறுப்பும் நிறைந்தது. இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி நவ்ரீன். 9 வருடங்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தினர்.

பிறகு அசாருதீன் வாழ்க்கையில் இந்தி நடிகை சங்கீதா பிஸ்லானி வந்தார். இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்தார். சங்கீதா பிஸ்வானியை 1996–ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

முகமது அசாருதீன்.   மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கடந்த 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 8-ந்தேதி அசாருதீன் மீதான தடை சட்ட விரோதமானது என்று ஆந்திர ஐகோர்ட்டு அறிவித்தது. அதோடு அவர் மீதான தடையையும் நீக்கியது

முகமது அசாருதீன் பரபரப்பு நிறைந்த வாழ்க்கை குறித்து ’அசார்’ என திரைப்படம் எடுக்கபட்டு உள்ளது. இப்படத்தில் அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார்.  அதில் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற  பிரச்சினை சர்ச்சைக்குரிய  கிரிக்கெட் சூதாட்ட விவகார காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய டீசர் வெளியிட்டு விழா  நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அசாருதீன் கிரே கலர் சட்டையும்  கருப்பு கலர் சட்டையும் அணிந்து வந்தார். எபோதும் போல அவர் தனது கலரை தூக்கு விட்டு இருந்தார். அடுத்து நடிகர் இம்ரான் காஸ்மி இருந்தார்.

டீசரில் இம்ரான் இந்தியா கிரிக்கெட் வீரர்களின் புளு கலர் செர்சி அணிந்து இருந்தார். இந்த ’அசார்’ படம் அசாருதீனின் வாழ்க்கையில் நடைபெற்ற மூன்று முக்கிய அமசங்களை நினைவுபடுத்துகிறது. கடவுள் , 2 திருமணங்கள், மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் ஆகியவையாகும்.

No comments

Powered by Blogger.