Header Ads



பஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார்

நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக சட்டத்திலிருந்து தப்பிக்க முயலக்கூடாது. சட்டம் சகலருக்கும் சமம் அதற்கு அனைவரும் அடிபணிவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை முன்மாதிரியானது என குறிப்பிட்ட பிரதியமைச்சர் எனினும் அவரது குடும்பத்தில் மற்றவர்கள் சட்டத்திலிருந்து

தப்பிக்கவே முயற்சிக்கின்றனர் என்றும் தமது கையாட்களை ஏவிவிட்டு அநாவசிய மான குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகையோர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இனங்காணப்படுள்ளதாலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதற்கிணங்கவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக ‘திவிநெகும’ நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில தகவல்களும் கிடைத்துள்ளன. மேலும் தகவல்கள் விசாரணைகளின் முடிவில் கிடைக்கும்.

சட்டத்திற்கு சகலரும் அடிபணிய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது உறுதி.

பஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை நல்ல பக்கம் ஒன்றும் உள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களுக்கு விசாரணைகளின் போது அவர் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையே அது.

அவரது குடும்பத்தில் ஏனையோரைப் போன்று இவர் விசாரணைக்கு பயப்படவில்லை. குடும்பத்தில் மற்றவர்கள் தப்பியோடப்பார்க்கின்றனர்.

சுதந்திரமாகக் கருத்துக்களை வெளிப் படுத்த பயப்படுகின்றனர்.

அவர்களது கையாட்களை வைத்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

இதன் வெளிப்பாடுகளில் ஒன்றே பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. தோல்வியுற்ற ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவை விசாரிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவரது கையாட்கள் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் அனைவரும் அறிந்ததே. இவர்களின் முகங்களைப் பார்த்தே இவர்கள் எத்தகையோர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் ஜனாதிபதியைப் பாதுகாப் பதே இவர்களின் நோக்கம்.

பாராளுமன்ற சிறப்புரிமை என்ற பெயரில் தனித்தனி விவாதங்களை நடத்த முற்பட்டனர்.

பாராளுமன்ற சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கு சபாநாயகர் உள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களின் சிறப்புரிமையையே அவர் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளார் அன்றி முன்னாள் உறுப்பினர்களையல்ல.

முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார். அவர் நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் அவரது பாதுகாப்புக்கான பொறுப்பு அரசாங்கத்தினுடையது.

No comments

Powered by Blogger.