Header Ads



27ஆம் திகதி, 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் - ரணில்

19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பவர்கள் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நிதியை வீண்விரயம் செய்தவர்களே இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று மாலை கட்சியின் நடவடிக்கையாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 27ஆம் திகதியன்று 19வது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும். இந்தநிலையில் புதிய நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படும் என்றும் ரணில் தெரிவித்தார்.

இதேவேளை 19வது திருத்தத்தை எதிர்ப்பவர்களை, அதற்கு ஆதரவு வழங்கக்கோரி 27ஆம் திகதியன்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டார்.

பிழையான வழியில் செல்வோர் நாடாளுமன்றத்தை தமது நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றனர். அவ்வாறான நாடாளுமன்றம் அவசியம் இல்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.