Header Ads



யெமனில் குண்டுபோட்ட விமானிகளுக்கு, சவூதி அரேபிய இளவரசர் ஆடம்பர கார்கள் பரிசு

யெமன் மீது வான் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கும் சவூதி  அரேபிய செல்வந்த இளவரசரின் அறிவிப்பால் சமூக தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

யெமன் மீதான முதல் கட்ட இராணுவ நடவடிக்கையை நிறைவுசெய்ததாக சவ+தி அரேபியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித் திருந்தது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு சவூதி  அரேபியாவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் மிகப்பெரிய செல்வந்தருமான இளவரசர் அல் வலீத் பின் தலால், 3 மில்லியன் பேர் பின்பற்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித் திருந்தார்.

"இந்த இராணுவ நடவடிக்கையில் அவர்களது பங்கை நான் வரவேற்கிறேன். சவூதியின் 100 (யுத்த விமான) விமானிகளுக்கு 100 பென்ட்லி கார்களை வழங்கவுள்ளேன்" என்று அந்த இளவரசரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது அறிவிப்பை 28,000க்கும் அதிகமானவர்கள் பகிர்ந்துகொண்டிருப்பதோடு 5,000க்கும் மேற்பட்டவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் சவூதிக்கு வெளியில் உள்ளவர்கள், குறிப்பாக யெமன் நாட்டவர்கள் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

இதில் யெமன் நாட்டவர் ஒருவர் சவூதி  இளவரசரின் அறிவிப்பிற்கு கீழால் சவூதி  வான் தாக்குதலில் அழிந்த தனது வீட்டின் படத்தை காண்பித்து: "அல் வலீத் சவூதி  விமானிகளுக்கு 100 பென்ட்லிக்களை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட வீடுதான் எனக்கு கிடைத்தது. இப்போது கூட அந்த அனைத்து விமானிகளை விடவும் எனது ஆன்மா உறுதியாகவே இருக்கிறது என்பதை என்னால் போட்டியிட்டு கூற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடும் விமர்சனத்தை அடுத்து இந்த பரிசு வழங்கும் டுவிட் அகற்றப்பட்டுள்ளது. இளவரசர் அல் வலீத்தின் டுவீட்டர் பக்கம் ஹக் செய்யப்பட்டிருப்பதாக ஒருசில சவூதி  ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மன்னர் அல் வலீத்தின் ஆடம்பர வாழ்வு குறித்து ஏற்கனவே கடும் விமர்சனம் உள்ளது. இதற்கு முன்னர் அவர் சவூதி  சாம்பியன்' போட்டியில் வென்ற கால்பந்து கழக அணிக்கு 25 கார்களை பரிசாக கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைகும்
    இது மாதிரி செய்திகள் கிடைத்தவுடன் அது பற்றி விலசாமல் உடனடியாக பதிவிடுவதால் ஜப்னாமுஸ்லிமும் சவ்தி என்றால் எலஜிக் பிடிக்கும் சில இயக்கத்தினர் என நம்பத் தேனுது
    காரணம் இச்செய்தியை எப்போதே வலீத் மறுத்துவிட்டார் அவரது டுவிட்டர் சிலரால் ஹேகர் செய்யப்பட்டு இச்செய்தி பதியப்பட்டது
    அவரைப் பற்றி விமர்சனம் இருப்பதும் குறிப்பாக சவ்தியை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு அவர் பின்னால் இருக்கின்றார் என்பது ஏற்புடையது
    சில வினாடிகளில் இட்லி இஸ்டாரு வந்துடுவார்

    ReplyDelete
    Replies
    1. அவர் இட்லி ஸ்டார் அல்ல சட்னி ஸ்டார்

      Delete

Powered by Blogger.