Header Ads



''19 ஆம் திருத்தச் சட்டம்'' நேர்மையான ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்

19ம் திருத்தச் சட்டம் ஊடகங்களை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவன அதிகாரிகளை அடக்கி ஒடுக்கும் வகையிலான விடயங்கள் 19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்;கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்களை, நிறுவன உரிமையாளர்களை அடக்கி ஒடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வகையில் காணப்பட்ட சட்டத் திருத்தத்தில் மேலும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரதியில் உள்ளடக்கப்படாத புதிய திருத்தங்களில் தனியார் துறை ஊடகங்கள் மீது வழக்குத் தொடரக் கூடிய வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான புதிய சட்டத் திருத்தங்களினால் ஊடகங்களின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

19ஆம் திருத்தச் சட்டம் சுயாதீன ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக நேர்மையாக கருத்துக்களை வெளியிடும் தனியார் ஊடகங்களுக்கு 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடும்.
அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படக்கூடிய அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக சுமத்தக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது.
நேர்மையாக செயற்படும் தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்களே இந்த புதிய முறைமையினால் பாதிக்கப்படுவர்.
எனவே இந்த புதிய உத்தேச சட்டம் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.