Header Ads



அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் - கடந்த அரசில் மோசடியில் ஈடுபட்ட சகலரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

அச்சுறுத்தல்களாலும், அழுத்தங்களாலும் நல்லாட்சியின் பொருட்டு முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை இடைநிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் முன்னைய ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை பெற்றுக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

மோசடிக்காரர்களை காப்பாற்றுவதற்கு சிலர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம் அவர்களுக்கு பயந்து மோசடிக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவும் முடியாது. 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட அனைவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

2 comments:

  1. பசில் ராஜபக்சவின் கைது, அரசின் இமேஜை தூக்கி நிறுத்தி இருக்கின்றது என்பது உண்மை. அரசின் உள்ளே புகுந்துள்ள முன்னால் அமைச்சர்கள், ஊழல் பெருச்சாளிகளையும் கைது செய்ய வேண்டுமே? முடியுமா?

    ReplyDelete
  2. Arasiyalai saakkadaiyaga maatriyavargalai summa vittuvaikka mudiyazu. Naattil
    inaththuvesaththai payirittavargal thangal pilaippukkaagavey appadi seithaargal.
    Ivargalazu oolal pattiyalil Muslimgalum Thamilargalum sambanthappadavillai ,
    enenraal " thiruttil" pangu matra inaththavarukkup poay serak koodazu enbazuthaan.
    Inangalin peyaril thaan kollai nadantheriyazu. Nallaatchi ellorukkum vdiya
    vendumenraal azatku eziraanavargal ellorume ezo oru vizaththil thandikkappadavey
    veyndum.. Vaalththukkal thalaivaa !

    ReplyDelete

Powered by Blogger.