Header Ads



19 ஐ எதிர்ப்பது அலிபாபாவும் 40 திருடர்களுமே - ஜனாதிபதியினால் முடியாது போனால், அது நாட்டின் துரதிஷ்டம் - UNP

நாட்டின் சகல அரசியல்வாதிகளின் அதிகாரங்களையும் குறைந்து அரச ஊழியர்கள் நாட்டை நிர்வகிக்கும் நிலைமையை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை குழப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதுடன் அதனை நிறைவேற்றி கொள்ளவதற்கு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பமும் அதுவாகும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முயற்சித்து வருகின்ற போதிலும் அலிபாபாவும் 40 திருடர்களுமே இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர்.

அவர்கள் இதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எதிர்வரும் செவ்வாய் கிழமை 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாது போனால், தற்போதை அரசாங்கத்திற்கு இருப்பில்லை.

அப்படியான நிலைமையில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அரசாங்கத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்ற முடியாது போனால், அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டு நடத்துவது சிரமமானது. இதனால் அரசாங்கத்தை கலைக்க நேரிடும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை அவரால் பெற முடியும் என நாம் நம்புகிறோம். ஜனாதிபதியினால் அது முடியாது போனால், அது நாட்டின் துரதிஷ்டம்.

இது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சினையோ அல்ல. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது போகுமாயின், அது முழு நாட்டுக்கும் கவலைக்குரிய விடயம் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இன்னொரு தேர்தல் வேண்டாமே? இயல்பு வாழ்க்கை இரண்டு மூன்று மாதங்களுக்கு பாதிக்கப்படும், அரச திணைக்களங்களின் இயல்பான செயல்பாடுகள் மந்தமடையும், பெருமளவு பணம் வீணாகும்.

    ReplyDelete

Powered by Blogger.