Header Ads



கோட்டாபயவின் வங்கிக் கணக்கை, பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு காலி நீதவான் நிலுபுலி லங்காபுர 26-03-2015 இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதவிர தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மீண்டும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

No comments

Powered by Blogger.