Header Ads



19 ஐ எதிர்த்து 3 மனுக்கள்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வாக்கெடுப்பின் அங்கிகாரமும் தேவையென மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவின் பிரிதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது  திருத்த சட்டமூலம் விசேட சட்டமூலமாக கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.