Header Ads



அரசைக் கவிழ்க்க கோத்தபாயவின் வீட்டில், சதித்திட்டம் தீட்டியுள்ளனர் - அஸாத் சாலி

தேசிய அரசைக் கவிழ்க்க கோத்தபாயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அஸாத் ஸாலி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மகிந்தவுடையதோ அல்லது கோத்தபாயவினுடையதோ அல்ல. அந்தக் காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களின் சொந்தக் காணிகளாகும்.  எனவே அவற்றை உரிய மக்களிடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு தினேஷ் குணவர்தனவும் கோத்தபாயவும் யார்? 

யுத்தக் காலத்தில் பாதுகாப்புத் தேவை கருதியே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியது. இப்போது தினேஷ் குணவர்தனவும், கோத்தபாயவும் அதைக் கொடுக்கவேண்டாம் என்கின்றார்கள். 

மூவின மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் சூழல் உதயமாகியுள்ளது. இந்தச் சூழலைக் கெடுத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை விதைத்து சிறுபான்மைச் சமூகத்தை அடக்கியாள தினேஷ் குணவர்தனவும், கோத்தபாயவும் முயல்கின்றனர். அதற்கு இனியொருபோதும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கமாட்டார். 

கடந்த திங்கட்கிழமை இரவு கோத்தபாயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருசில முன்னாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி தேதிய அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவருக்கும் பயப்படக்கூடியவர் அல்லர். இன்று முழு சர்வதேசமே அவரை வரவேற்கின்றது. 

மேலும் தேசிய கீதம் தமிழில் பாடுவது தமிழ் பேசும் மக்களின் உரிமை. அந்த விடயம் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படுகின்றது. 

தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று இலங்கை அரசமைப்பில் இல்லையெனத் தெளிவாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் விலக்கியுள்ளனர். அதற்கு எதிராக வேண்டுமென்றால் விமலும், தினேஷிம், ஞானசார தேரரும் மாத்திரம் இருப்பார்களே தவிர மாறாக, சிங்கள மக்கள் இருக்கமாட்டார்கள். 

ஏனென்றால், சிங்கள மக்கள் இவர்களை அரசியலிலிருந்து ஒதுக்கியுள்ளனர். இவர்கள் இனவாதத்தை இனி இந்த நாட்டில் விதைக்க முடியாது.  அத்துடன்  இம்முறை புனித மக்கா பயணத்துக்குக் கூடுதலாக ஆயிரம் பேரை கூட்டிச் செல்ல சவூதி அரசுடன் பேச்சு நடத்தப்படுகின்றது. அத்துடன், மக்கா யாத்திரைக் கட்டணத்தைக் குறைப்பது சம்பந்தமாகவும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

4 comments:

  1. அசாத் சாலி வாயைப் பொத்திக் கொண்டு இருந்தாலே மிகவும் நல்லது.

    இவர் தேவையில்லாமல் வாயைத் திறந்து இரண்டு விடயங்களை வளர்த்து விடுகின்றார்.

    1. பெளத்த இனவாதம்.
    2. ராஜபக்சவினரின் செல்வாக்கு.

    இவை இரண்டும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு உலை வைக்கும் செயல்கள்.

    ReplyDelete
  2. Why someone needs to shut up his mouth? Shutting up the mouth is the solution for our problem?? Matters will be resolved by themselves or we don't even have the basic right of freedom of speech?? At least someone speaks!!! This is equivalent to a dog sleeping in a hay stack- Neither does it sleep itself not qallows someone else sleep. This is the plight of our Muslims. Always backbiting, ridiculing. Howcome we can come up??

    ReplyDelete
  3. நீங்கள் என்ன ஞாயம் சொன்னலும் இனவாதம்தான் தலை தூக்கும். வாய்மட்டும்தான் செயலில் இல்லை. உங்களுடைய செயலும்பேச்சும் இனவாதத்தையே வட்டமிட்டுக்காட்டுகிறது. கொஞ்சநாளைக்கு வாயை அல்லது நாவை அடக்கவும்.

    ReplyDelete
  4. ஜனநாயகச் சூழலின் பொது அரசியலில் வெற்றிபெற முடியாத ஒரு அரசியல்வாதியே அசாத் சாலி. அதிக பட்சமாக ஒரு அரசியல் வாதியாக இவரால் பெற முடிந்த வாக்குகள் பத்தாயிரத்திற்கும் குறைவு.

    இவர் எப்பொழுது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என்று புறப்பட்டு, இனவாதிகளுடன் மோதி, இனவாத பிரச்சார வளையத்திற்குள் புகழ் பெற ஆரம்பித்தாரோ, அதன் பின்னரே இவரால் ஒரு மாகாண சபை உறுப்பினராக வர முடிந்தது. அதல்லாமல் இவரால் கொழும்பு முநிசிபளைக் கூட தாண்ட முடியம் இருந்தது.

    தற்பொழுது பாராளுமன்றக் கனவில் இருக்கும் இவருக்கு, இவரது அரசியல் வியாபாரம் நடக்க வேண்டுமானால், இனவாதம் நாட்டில் இருக்க வேண்டும், அதற்காகத்தான் என்னி ஊற்றி, அணையப்போகும் நெருப்பை மறுபடியும் சுவாலை விட்டு எரிய வைக்க படாத பாடு படுகின்றார்.

    நுகேகொடையில் தோல்வியில் முடிந்து இருக்க வேண்டிய ஒரு கூட்டத்தை, தனது வாயால் ஊதிப் பெருப்பித்து, சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி, மகிந்தவுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி உருவாக வழி அமைத்துக் கொடுத்தார்.

    ReplyDelete

Powered by Blogger.