Header Ads



அலிசாகிர் மௌலானாவின்,வெற்றிடத்துக்கு நஸீர் ஹாஜி

    ஏறாவூர் நகரசபையின் தவிசாளராக கடமையாற்றிய அலி சாஹிர் மௌலானா அவர்கள் ,கிழக்குமாகாணசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டதால் , நகரசபையில் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்துக்கு தேசிய காங்கிரஸ் சார்பாக பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

   இன்று காலை (27) தேசிய காங்கிரஸின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் ALM.அதாஉல்லாஹ் (MP) அவர்களிடம் ஏறாவூர் நகரசபையின் புதிய  உறுப்பினராக  அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.

சத்தியப்பிரமாண நிகழ்வின்போது கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.


No comments

Powered by Blogger.