Header Ads



இலங்கையில் பறவை காய்ச்சலா..??

தென் மாகாணத்தில் பறவைக் காய்ச்சலைப் போன்றதொரு நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சலைப் போன்றதொரு இனந்தெரியாத நோய் ஒன்று தெற்கில் பலரை பாதித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளில் அதிகளவில் இந்த நோய்த் தொற்று பரவியுள்ளது

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த 4 பேர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையின் ஊழியர்களும் நோய்த் தொற்று பரவுவதனை தவிர்க்கும் வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நோய் இதுரையில் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையும் அதனால் தற்போது பணர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இலங்கையின் சனத்தொகை, இந்தத் தீவு கொள்ளாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இலங்கையின் பெரும்பாலான வீதிகளில் நெரிசல் இன்றி செல்லவே முடியாது.

    இலங்கையின் கொள்ளளவை விடவும் சனத்தொகை பெருகும் பொழுது சனத்தொகையை மீதும் குறைக்குமுகமாக இதுபோன்ற நோய்கள், யுத்தங்கள், அழிவுகள் ஏற்படுவது நியதி.

    ReplyDelete
  2. Little star enna karuthu!! Adadada. So you and your family can be victims or bird flu appa sanathohai kuraiyum thaane?

    ReplyDelete
  3. சனத்தொகை குறைக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வேலை வெட்டி இல்லாமல் பிள்ளை குட்டிகளை மட்டும் பெற்றுப் போடுவது நமது இலங்கைத் தீவிற்கு பெரும் பாரம் ஆகும்.

    ReplyDelete

Powered by Blogger.