Header Ads



டி.எஸ்.சேனாநாயக்கா தேசத்தின் தாத்தா, தேசத்தின் தந்தை மஹிந்த ராஜபக்ச - டிலானின் புதிய தத்துவம்

தேசத்தின் தந்தையாக மஹிந்த ராஜபக்சவையே கருத வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேசமான்ய டி.எஸ்.சேனாநாயக்க தேசத்தின் தாத்தாவாகவே கருதப்பட வேண்டும். டி.எஸ்.சேனாநாயக்கவை இழிவுபடுத்த இவ்வாறு நான் கூறவில்லை.

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த முழுப் பெருமையும் மஹிந்த ராஜபக்சவையே சாரும். எனவே, மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவரின் கீழ் பிரதமராக செயற்படுவதனை நான் விரும்பவில்லை. மஹிந்த ராஜபக்சவிற்கு தேசத்தின் தந்தை என்ற பட்டம் சூட்டப்பட வேண்டும்.

மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் கூறவில்லை. எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் பெயரளவு பிரதமராக இருப்பதனை நான் விரும்பவில்லை.

19ம் திருத்தச் சட்டம் இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னரே அமுல்படுத்தப்படும். எனவே நிறைவேற்று அதிகார பிரதமர் ஒருவர் ஐந்து ஆண்டுகளின் பின்னரே உருவாகுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனை மைத்திரிபால சிறிசேனவோ, சந்திரிக்காவோ, மஹிந்தவோ விரும்பவில்லை.

சிங்கமும் புலியும் மோதிக் கொள்ளட்டும் என காத்திருக்கும் நரியைப் போன்று ரணில் விக்ரமசிங்க காத்திருப்பதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. நீங்க தேசத்தின் மகன் போலும்

    ReplyDelete
  2. தாத்தா பாட்டிக்கதை எல்லாம் சரிதான்
    தந்தை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெறியுமா
    டிலான். தலைவன் என்ரால் தனது நாட்டின்
    மக்கள்மீது அன்பு கொண்டவராக இருக்க
    வேண்டும் தமிழர்கள் தமக்கு இழைக்கப்
    பட்ட அநீதியை மறக்கமுடியுமா?
    முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதியை
    மறக்க முடியுமா? ஏன் சிங்கள மக்களும்
    கூட அழிக்கப்பட்டார்களே.தேவை என்றால்
    அழகான அடைமொழி நாம் தருகிறோம்...

    ReplyDelete

Powered by Blogger.