Header Ads



கோதபாய ராஜபக்ஸவை கைது செய்ய தீர்மானிக்கவில்லை - அனுரகுமார

-gtn-

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுப் பேரவை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவைக் கூட்டத்திற்கு தாம் சற்று தாமதித்தே சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், கோதபாயவை கைது செய்ய ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என அங்கிருந்த எவரும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நபரையும் கைது செய்ய தேசிய நிறைவேற்றுப் பேரவைக்கு அதிகாரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோதபாயவை கைது செய்ய தேசிய நிறைவேற்றுப் பேரவை தீர்மானம் எடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோதபாயவை கைது செய்ய தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தீர்மானிக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.