Header Ads



துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனை, விமர்சித்த உலக அழகி மீது வழக்கு பதிவு

 
துருக்கி அதிபரின் செயல்பாடுகளை தனது வலைதள பக்கத்தில் கிண்டல் செய்த முன்னாள் உலக அழகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.ஆசிய கண்டத்தையும் ஐரோப்பா கண்டத்தையும் இணைக்கும் செவ்வக வடிவ பீடபூமியாக துருக்கி அமைந்துள்ளது. இங்கு ரெசப் தையீப் எர்டோகன் அதிபராக இருக்கிறார்.துருக்கியை சேர்ந்த மெர்வி புயுக்சாரக் என்ற 36 வயதான பெண், கடந்த 2006-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றவர். முன்னாள் உலக அழகியான மெர்வி, சமீபத்தில் அதிபர் எர்டோகனை கிண்டல் செய்து டுவிட்டர் வலைதள பக்கத்தில் கவிதை வெளியிட்டார். கவிதையுடன் அதிபரின் கேலிச்சித்திர படமும் வெளியாகியிருந்தது. அதிபரை கிண்டல் செய்யும் கவிதை இன்ஸ்டாகிராம் உட்பட பல்வேறு வலைதள பக்கங்களிலும் வெளியானது.

இந்த கவிதையை கேலிச்சித்திரத்துடன் அந்நாட்டின் ஹுரியத் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தனது வலைதள பக்கத்தில் இருந்த கவிதையை முன்னாள் அழகி நீக்கிவிட்டார். இந்த கவிதையால் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து, முன்னாள் உலக அழகி மெர்வியிடம் கடந்த 2 நாட்களாக துருக்கி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். துருக்கி அதிபரை கிண்டல் செய்ய வேண்டும் என்று கவிதையை வெளியிடவில்லை. அவரை பற்றி வேடிக்கையாகத்தான் கவிதை எழுதினேன். நான் தவறு செய்யவில்லை என்று முன்னாள் உலக அழகி மெர்வி கூறியுள்ளார். துருக்கி போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவரது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று துருக்கி போலீசார் நேற்று செய்தி வெளியிட்டனர்.

No comments

Powered by Blogger.