Header Ads



'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் - வட கொரியா

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.