Header Ads



அமெரிக்காவை கலக்கும், இலங்கை வைத்தியர் பர்ஸான் தாஹிர் (வீடியோ)

( MJM. Sharthaar)

ஹாலிவூட்டில் மிகப்பிரபலமான நடிகையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரின் விசேட தூதுவராக சமூகத்தொண்டாற்றுபவருமான  அஞ்சலினா ஜூலி, பரம்பரை அலகுகள் மூலம் தனக்கு புற்று நோய் வரலாம் என்ற காரணத்துக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது மார்பகங்களை அகற்றி அதன் மூலம் உலக ஊடகங்களின் பேசு பொருளானார். அவர்  தற்போது தனது கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்களையும் அகற்றப்போவதாக கூறியுள்ளமையால் அது சம்பந்தமாக அமெரிக்க மற்றும் மேலைத்தேய ஊடகங்கள் மீண்டும் கருத்துக்களையும் செய்திகளையும் ஒளிபரப்பி வருகின்றன.


அந்த வகையில் இலங்கையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் பெண்ணியல் பிரிவில் மிக பிரபலமான வைத்தியராக வலம் வரும் டாக்டர் பர்ஸான் தாஹிர் அவர்களை அமெரிக்க ஊடகமொன்றுக்கு பேட்டி கண்டுள்ளது. டாக்டர் பர்ஸான் அவர்கள் இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் கம்மல்துறை எனும் கிராமத்தில் ஜனாப் தாஹிர் மௌலவி அவர்களின் மூத்த மகனாகப்பிறந்தவராவார்.

அவர் தனது ஆரம்ப கல்வியை மினு/அல் பலாஹ் மஹாவித்தியாலயத்திலும் பின்னர் ஐந்தாம் வகுப்பு புலமைபரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்ததன் காரணமாக தனது  இரண்டாம் நிலைகல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கற்றார். பாகிஸ்த்தான் முல்தான் பிரதேசத்தில் அமைந்துள்ள நிஷ்டர் மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் பட்டம் பெற்றார்.

தன் உயர் படிப்பிற்க்காக ஐக்கிய அமெரிக்கா சென்ற அவர் அங்கு நியுயோர்க் மௌன்ட் வெர்னொன் மருத்துவ கல்லூரியில் இணைந்து அங்கு மருத்துவ பயிற்சியை மேற்கொண்டதுடன் அங்கு பிரதான உள் நிலை வைத்தியராக உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது, அவரது மருத்துவ தகைமைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, இலங்கையில் பிறந்த இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த இவர் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவராக இருப்பது இலங்கை வாழ் மக்களும் பெருமைப்பட்டுக்கொள்ள கூடிய ஒரு விடயமாகும்.

Clinical Expertise:

Gynecologic Oncology: Robotic Gynecological Cancer Surgery

Education:

MD, Nishter Medical College, Multan, Pakistan

Residency:

Obstetrics and Gynecology: Robert Wood Johnson University Hospital, New Brunswick, NJ

Internal Medicine: Mount Vernon Hospital (New York, NY),

Fellowship:

Gynecological Oncology and Robotic Surgery: Mayo Clinic, Rochester, MN

Critical Care Medicine: Mount Sinai Medical Center, New York, NY

Board Certification:

American Board of Internal Medicine (2004)

American Board of Obstetrics and Gynecology (2012)

1 comment:

Powered by Blogger.