Header Ads



''ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரை பழிதீர்க்கவே, கோடாரியால் வெட்டினேன்''

தமது பெற்றோரை கெட்ட வார்த்தைகளால் ஏசியமை காரணமாக தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடரியால் வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட லக்மால் என்பவர் தெரிவித்துள்ளார். 

பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலேயே டொன் இஸார லக்மால் சபுதந்திரி என்ற குற்றம் சுமத்தப்பட்டவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிசேனவை தாக்குவதற்காக தாம், ஒழிந்து காத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பெற்றோரை ஏசியமைக்கு பழி தீர்ப்பதற்காகவே தாம் சிறிசேனவை கோடரியால் தாக்கியதாக லக்மால் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் பயன்படுத்திய கோடரியை மீட்ட பொலிஸார் அதனை இன்று பொலநறுவை நீதிமன்றத்தில் கையளித்தனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்திய சந்தேகநபர் லக்மால் என்பவரை வரும் ஏப்ரல் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை கடும் காயங்களுக்கு உள்ளான சிறிசேன, கொழும்பின் தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறிசேன சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.